Maharashtra Political Crisis - மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் இருக்கும் 288 இடங்களில், பாஜக 105 தொகுதிகளைக் கைப்பற்றியது
Maharashtra Political Crisis - மகாராஷ்டிராவில், ஆட்சியமைப்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வரும் நிலையில், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை (President's Rule) அமல்படுத்த சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசின் இந்த முடிவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா கட்சி (Shiv Sena) மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிகிறது.
முன்னதாக, மாநிலத்தின் தனிப் பெரும் கட்சியான பாஜக, ஆட்சியமைக்க உரிமை கோரப்போவதில்லை என்று அறிவித்த உடன், சிவசேனாவுக்கு அழைப்பு விடுத்தார் அம்மாநில ஆளுநர். சிவசேனா, ஆட்சியமைக்க உரிமை கோர, 3 நாட்கள் கால அவகாச நீட்டிப்பு வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இப்படிபட்ட நிலையில்தான், இன்று மகாராஷ்டிராவின் மூன்றாவது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்தார் ஆளுநர்.
அவர்களும் ஆட்சியமைக்கு உரிமை கோரவில்லை என்பதால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் சிபாரிசு செய்ததாக தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்துத்தான் சிவசேனா, தற்போது உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.
மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது குறித்து காங்கிரஸ் (Congress) தலைவர் சோனியா காந்தியும் (Sonia Gandhi), சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவும் (Uddhav Thackeray) தொலைபேசி மூலம் நேற்று உரையாடினார்கள். சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி வைத்து ஆட்சியமைக்கும் நோக்கில் இந்த உரையாடல் அமைந்தது. இருப்பினும் அது குறித்து இறுது முடிவு எடுக்கப்படாததைத் தொடர்ந்து, மாநிலத்தில் ஆட்சியமைபத்தில் மீண்டும் இழுபறி நீடித்தது.
மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் இருக்கும் 288 இடங்களில், பாஜக 105 தொகுதிகளைக் கைப்பற்றியது. சிவசேனா, 56 இடங்களைப் பிடித்தது. இருவரும் இந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தால் சுலபமாக மெஜாரிட்டி கிடைத்துவிடும். சேனாவைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ், 54 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ் 44 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.