This Article is From Nov 01, 2019

பாஜக ஆதரவு இல்லாமல் எங்களால் ஆட்சியமைக்க முடியும்: சிவசேனா அதிரடி!!

50 சதவீத அதிகாரப்பகிர்வு, 2.5 வருடத்துக்கு சிவசேனா முதல்வர், அமைச்சரவையில் சரிபாதி இடங்கள் என்ற திட்டத்தில் சிவசேனா உறுதியா உள்ளது. மேலும், “லோக்சபா தேர்தலுக்கு முன்னர் 50:50 அதிகாரப் பகிர்வுக்கு அமித்ஷா ஒப்புக் கொண்டதாக சிவசேனா கட்சி கூறிவருகிறது.

பாஜக ஆதரவு இல்லாமல் எங்களால் ஆட்சியமைக்க முடியும்: சிவசேனா அதிரடி!!

தீபாவளி பண்டிகையை ஒட்டிய மரியாதை நிமித்தமாக சரத் பவாரை சந்தித்தாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

Mumbai:

சிவசேனா நினைத்தால் மகாராஷ்டிராவில் பாஜகவின் ஆதரவு இல்லாமல் ஆட்சியமைக்க முடியும் என அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, சஞ்சய் ராவத் நேற்று மாலை தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும், இது தீபாவளி பண்டிகையை ஒட்டிய மரியாதை நிமித்தமான சந்திப்பு தான், வேறு எதுவும் இல்லை என்றும் சஞ்சய் ராவத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, “சிவசேனா நினைத்தால், மாநிலத்தில் நிலையான அரசை அமைப்பதற்கு தேவையான எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற முடியும். 50-50 என்ற அடிப்படையில் ஆட்சியமைக்க வேண்டும் என்பதற்காகவே மக்கள் எங்கள் கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர். சிவசேனாவில் இருந்து முதல்வர் வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்” என்று அவர் கூறினார்.

50 சதவீத அதிகாரப்பகிர்வு, 2.5 வருடத்துக்கு சிவசேனா முதல்வர், அமைச்சரவையில் சரிபாதி இடங்கள் என்ற திட்டத்தில் சிவசேனா உறுதியா உள்ளது. மேலும், “லோக்சபா தேர்தலுக்கு முன்னர் 50:50 அதிகாரப் பகிர்வுக்கு அமித்ஷா ஒப்புக் கொண்டதாக சிவசேனா கட்சி கூறிவருகிறது. 

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா, மகாராஷ்டிராவின் முதல்வராக இருந்த தேவேந்திர ஃபட்னாவிஸ்தான், முதல்வராக தொடர வேண்டும் என்று கருதுகிறார்கள். சிவசேனாவின் நிலைப்பாட்டுக்கு எதிர்க்கட்சியான தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் சரத் பவார், ‘சிவசேனாவின் நிபந்தனையில் எந்த தவறும் இல்லை,' என்றுள்ளார். 

மகாராஷ்டிர மாநில சட்டமன்றத் தொகுதி பங்கீடு தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியினருடன் மும்பையில் பேச்சுவார்த்தை நடத்திய பொழுது 50 சதவீத அதிகாரப் பங்கீடு திட்டத்தை சிவசேனை முன்வைத்தது உண்மைதான். ஆனால் அந்த திட்டத்தை பாரதீய ஜனதா கட்சி ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை என மகாராஷ்டிர மாநில முதல்வர் பட்னாவிஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.

மகாராஷ்டிர தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி, மொத்தம் இருக்கும் 288 தொகுதிகளில் 161-ஐக் கைப்பற்றின. பாஜக, 105 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சிவசேனா, 56 இடங்களில் வெற்றியடைந்தது. தேசியவாத காங்கிரஸ் தேர்தலில், 54 இடங்களையும், காங்கிரஸ், 44 இடங்களையும் வென்றன. 
 

.