Read in English
This Article is From Oct 17, 2019

கை குலுக்குவது போல் வந்து, எம்.பி.யை கத்தியால் குத்திய மர்ம நபர்! வாட்சால் உயிர் தப்பியது!

தேர்தல் பிரசாரத்தில் எம்.பி. ஓம்ராஜ் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில் அவருக்கு அசம்பாவிதம் நடந்திருக்கிறது. கத்தியால் குத்தியவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
இந்தியா Edited by

எம்.பி. ஓம்ராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Mumbai:

தேர்தல் பிரசாரத்தின்போது கை குலுக்குவது போல் வந்த மர்மநபர் ஒருவர், எம்.பி.யை கத்தியால் குத்தினார். அப்போது, கையில் வாட்ச் கட்டியிருந்ததால் ஆபத்திலிருந்து எம்.பி. உயிர் தப்பினார். 

மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் பாஜக, சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த நிலையில், உஸ்மானாபாத் மாவட்டத்தில் அந்த தொகுதியின் சிவசேனா எம்.பி. ஓம்ராஜ் நிம்பல்கர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். 

படோலி நைகான் என்ற கிராமத்தில் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது, அவரிடம் கை குலுக்குவதற்காக ஒருவர் அருகே வந்தார். வந்ததும், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் எம்.பி.யை குத்தினார். 
 

இதில், எம்.பி. ஓம்ராஜ் கையில் வாட்ச் கட்டியிருந்ததால் நரம்புகளில் கத்தி படவில்லை. இதனால் அவர் பேராபத்திலிருந்து தப்பியதாக போலீசார் தெரிவித்தனர். 

ஓம்ராஜின் தந்தை பவன்ராஜ் நிம்பல்கர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக இருந்தார். அவர் மும்பை - புனே எக்ஸ்பிரஸ் சாலையில் கடந்த 2006 ஜூன் 3-ம்தேதி கலம்போலி என்ற பகுதி அருகே அவரது காரில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் மக்களவை உறுப்பினர் பத்மசிங் பாட்டீல் முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement