This Article is From Nov 26, 2019

#WeAre162,ஆனால் நேற்றைய அணிவகுப்பில் 158 பேர் பங்கேற்பு; சிவசேனாவின் விளக்கம்

மூன்று தரப்பு கூட்டணியான "மகாராஷ்டிர விகாஸ் அகாதி", நேற்று காலை ஆட்சி அமைக்க உரிமை கோரிய பின்னர் தங்களது எம்எல்ஏக்களை ஊடகங்கள் முன் அணிவகுத்து காண்பித்தது.

#WeAre162,ஆனால் நேற்றைய அணிவகுப்பில் 158 பேர் பங்கேற்பு; சிவசேனாவின் விளக்கம்

வசேனா தலைவர் பிரியங்கா சத்ருவேதி #WeAre162 என்ற ஹேஷ்டேக்குடன் ட்வீட் செய்துள்ளார்.

Mumbai:

சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி நேற்றைய தினம் தங்கள் பலத்தை நிரூபிக்கும் வகையில் மும்பையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்களது எம்எல்ஏக்களை அணிவகுக்க வைத்து ஊடகங்களுக்கு காட்டியது. அந்த அணிவகுப்பில், 162 எம்எல்ஏக்கள் உள்ளனர் என்று கூறப்பட்ட நிலையில், 158 பேர் மட்டுமே பங்கேற்றனர் என்ற தகவல்கள் வெளியானது.

இதைத்தொடர்ந்து, சிவசேனாவை சேர்ந்த, பிரியங்கா சத்ருவேதி இது தொடர்பாக தனது ட்வீட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதில், 4 எம்எல்ஏக்கள் இடம்பெறாதது ஏன் என்று தெரிவித்துள்ளார். அதில், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, நரேந்திர ஜிர்வால் மும்பைக்கு தாமதமாக வந்தடைந்தார், தர்மாராவ் என்ற எம்எல்ஏ மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரால் பங்கேற்க முடியவில்லை. 

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரத்விராஜ் சவுகான் டெல்லியில் இருந்ததால் பங்கேற்க முடியவில்லை. சுனில் கேதார் நாக்பூரில் உள்ளாட்சி தேர்தல் பரபரப்புரையில் இருந்ததால் பங்கேற்க முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார். இதனுடன், பிரியங்கா சத்ருவேதி #WeAre162 என்ற ஹேஷ்டேக்கையும் பதிவு செய்துள்ளார். 
 


முன்னதாக, கடந்த சனிக்கிழையன்று மகாராஷ்டிரா அரசியலில் யாரும் எதிர்பாராத திருப்பமாக ஆட்சி அமைக்க பாஜகவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். அதைத்தொடர்ந்து, அதிகாலை 5.47 மணி அளவில் அமலில் இருந்த குடியரசுத்தலைவர் ஆட்சி திரும்பபெறப்பட்டு, காலை 7.50 மணி அளவில் பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். 

இதையடுத்து, மகாராஷ்டிராவில் எதிர்பாராத விதமாக ஆட்சியமைத்த பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸூக்கு எதிராக சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

162 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக அவர்களின் கையெழுத்துடன் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் அளித்துள்ளன. 

288 உறுப்பினர்கள் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏக்கள் ஆதரவு தங்கள் வசம் உள்ளதாக 3 கட்சிகளும் தெரிவித்துள்ளன. அதன்படி, சிவசேனா வசம், சுயேட்சைகளின் ஆதரவுடன் 63 எம்எல்ஏக்கள் உள்ளதாகவும், காங்கிரஸ் வசம் 44 எம்எல்ஏக்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேசியவாத காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு ஆதரவு அளித்ததாக அஜித்பவார் கூறிய நிலையில், அக்கட்சியில் மொத்தமுள்ள 54 எம்எல்ஏக்களில் 51 எம்எல்ஏக்களின் ஆதரவு கையெழுத்தை தேசியவாத காங்கிரஸ் சமர்ப்பித்துள்ளது. 

.