This Article is From Feb 18, 2019

சிவசேனா - பாஜக கூட்டணி உறுதியானது! - தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு

மக்களவை தேர்தலில் மஹாராஷ்டிராவில் பா.ஜ.க - சிவசேனா கூட்டணி உறுதியானதாக பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Advertisement
இந்தியா Written by

தேர்தலில் 50-50 என போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் பா.ஜ.க - சிவசேனா கூட்டணி உறுதியானதாக மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிக பலம் பொருந்திய சிவசேனாவும், பாஜக-வும் கூட்டணி வைத்து எதிர்வரும் லோக்சபா தேர்தலை சந்திக்கும் என்று தகவல் வந்துள்ளது. இரண்டு கட்சிகளும் மக்களவைத் தேர்தலில் சரிசம இடங்களில் போட்டியிடும் என்று கூறப்படுகிறது. 

கடந்த சில ஆண்டுகளாக சிவசேனாவுக்கும் பாஜக-வுக்கும் தொடர்ந்து வார்த்தைப் போர் நடந்து வந்தது. குறிப்பாக சிவசேனா, பிரதமர் மோடி மற்றும் பாஜக-வை கடுமையாக சாடியது. இதனால், வரும் மக்களவைத் தேர்தலில் சிவசேனாவும் பாஜகவும் எதிரெதிரணியில் நின்று போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிவசேனாவுடன் கூட்டணி வைப்பதில் பாஜக தொடர்ந்து தீவிரம் காட்டி வந்தது. குறிப்பாக கடந்த பல நாட்களாக சிவசேனாவின் முக்கிய நிர்வாகிகளுடன் பாஜக முக்கிய புள்ளிகள் திரைமறைவு கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். இதன் பலனாக, கூட்டணி குறித்து சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளது. 

மாநிலத்தில் மொத்தம் இருக்கும் 48 மக்களவைத் தொகுதிகளில், பாஜக 25 இடங்களிலும் சிவசேனா 23 இடங்களிலும் போட்டியிடும் என்று தெரிகிறது. உத்தர பிரதேசத்திற்குப் பிறகு மகாராஷ்டிராவில்தான் அதிக நாடாளுமன்றத் தொகுதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

கடந்த 30 ஆண்டுகளாக இரண்டு கட்சிகளும் கூட்டாளிகளாகத்தான் இருந்தன. தேர்தலில் கூட்டணி வைத்துத்தான் போட்டியிட்டன. ஆனால், 2014 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், இருவரும் தனித்து நின்று தேர்தலை சந்தித்தனர். ஆனால், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், தேர்தலுக்குப் பின்னர் கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். 

சிவசேனா, பாஜக-வுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்து வந்தாலும், பாஜக-வையும் பிரதமர் மோடியையும் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தது. ஆனால், இப்போது இரு கட்சிகளுக்கும் இடையில் இருந்த முரண் பேசித் தீர்க்கப்பட்டுவிட்டதாக தெரிகிறது. 

Advertisement

இந்நிலையில், இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் பாஜக தலைவர் அமித்ஷா - சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ஆகியோர் இன்று மாலை கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா சட்டமன்றம் தேர்தலில் சிவசேனா-பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் என அறிவித்தார்.

Advertisement