This Article is From Jan 27, 2019

அக்ஷய் யாதவை எதிர்த்து பிரோசாபாத்தில் போட்டி : சிவபால் யாதவ் அறிவிப்பு

Lok Sabha Election 2019: அகிலேஷ் யாதவால் புறக்கணிக்கப்பட்டதால் புதுக்கட்சியை தொடங்கும் நிலைக்கு தான் தள்ளப்பட்டதாக சிவபால் யாதவ் கூறியுள்ளார். அவரது தேர்தல் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அக்ஷய் யாதவை எதிர்த்து பிரோசாபாத்தில் போட்டி : சிவபால் யாதவ் அறிவிப்பு

அகிலேஷ் யாதவின் ஆதரவாளரை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுகிறார் சிவபால் யாதவ்

Lucknow:

பிரகதிசீல் சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் அகிலேஷ் யாதவின் சித்தப்பாவுமான சிவபால் யாதவ், அகிலேஷ் யாதவின் முக்கிய ஆதரவாளரை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். 

சமாஜ்வாதி கட்சியின் தலைவராக இருக்கும் அகிலேஷ் யாதவுக்கு சிவபால் யாதவ் என்ற சித்தப்பாவும், ராம்கோபால் யாதவ் என்ற மாமாவும் உண்டு. சில மாதங்களுக்கு முன்பு கட்சியில் ஏற்பட்ட பிரச்னையில் சித்தப்பா சிவபால் யாதவ் முலாயம் சிங் பக்கமும், மாமா ராம்கோபால் யாதவ் அகிலேஷ் பக்கமும் இருந்தனர்.

நீண்ட போராட்டத்திற்கு பின்னர் கட்சியை அகிலேஷ் யாதவ் தன் வசமாக்கினார். இந்த விவகாரத்தில் அகிலேஷ், ராம்கோபால் ஆகியோர் சிவபாலுக்கு எதிரிகளாக மாறி விட்டனர். 

இதையடுத்து சிவபால் யாதவ் பிரகதிசீல் சமாஜ்வாதி என்ற கட்சியை தொடங்கினார். இந்த நிலையில், ராம்கோபால் யாதவின் மகன் அக்ஷயை எதிர்த்து பிரோசாபாத் தொகுதியில் போட்டியிடப் போவதாக சிவபால் யாதவ் அறிவித்திருக்கிறார். 

.