பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த கொலை சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர்
ஹைலைட்ஸ்
- குழந்தையின் உடலை குப்பைத் தொட்டியில் கண்டெடுத்துள்ளனர்
- தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
- சமூகவலைதளத்தில் இந்த கொலை பெரும் அதிர்வுகளை உருவாக்கியுள்ளது.
New Delhi: ஞாயிறன்று உத்தரபிரதேசத்தின் அலிகார் நகரில் இரண்டு வயது பெண் குழந்தையின் சிதைந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டது. முன்னதாக குடும்பத்தினர் மே31 அன்று குழந்தை காணாமல் போய் விட்டதாக கூறி காவல்துறையில் புகாரளித்த நிலையில் காவல்துறையின் தேடலின் போது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் உடல் அந்தக் குழந்தையின் வீடிருந்த டாப்பல் டவுணுக்கு பக்கத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொலை விசாரணையில் இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் குழந்தையின் வீட்டிலிருந்து அரைக் கி.மீ தொலைவில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டுள்ள நபர்களில் ஒருவரிடம் குழந்தையின் சந்தை ரூ. 10,000 வரை கடன் வாங்கியிருந்தார். கைது செய்யப்பட்ட சஹீத் மற்றும் அஸ்லம் ஆகியோர் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த கொலை சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர். கொலை செய்து வீட்டிற்கு அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் குழந்தையின் உடலை விட்டு சென்று விட்டதாக கூறினார்.
இந்த வழக்கு தேசிய பாதுகாப்பு சட்டமான பயங்கரவாத -எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் அது விசாரணை செய்யப்படுகிறது. இந்த வழக்கினை அலட்சியம் செய்த 5 காவல்துறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
காவல்துறை அதிகாரி குழந்தை கொல்லப்படுவதற்கு முன் பாலியல் வன்முறை மற்றும் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் அந்தக் குழந்தையின் கண்களை தோண்டி எடுத்துள்ளனர். கால்கள் முறிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
குழந்தையின் குடும்பத்தினர் கொடுத்த வழக்கின் அடிப்படையில் குடும்பத்தினர் குழந்தை கடத்தப்பட்டதாக கூறி வழக்கை பதிவு செய்தனர்.
அந்தக்குழந்தையின் தந்தை சஹீத்திடம் பணம் கொடுக்க வந்த போது அந்த குழந்தையின் உடல் சஹீத்தின் வீட்டில் மறைக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. அதன் பின்னரே குழந்தையின் உடலை குப்பைத் தொட்டியில் வீசியுள்ளனர்.
குழந்தையின் பெற்றோரும் உறவினர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின் அதிகாரிகளின் சமாதானப்படுத்தியதில் கலைந்து சென்றுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரும் கொலை செய்யப்பட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்தனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் மஹிந்த் தியோரா “இந்த வழக்கில் விரைவாக நீதியை உறுதிப்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
நடிகர் அபிசேக் பச்சன் “பேசுவதற்கு வார்த்தைகளே இல்லை. யாரால் இப்படி ஒரு காரியத்தை செய்ய முடியும்” என வருத்தப்பட்டு ட்விட் செய்துள்ளார்.