துருக்கியில் உள்ள தீயார்பகிர் என்னும் நகரத்தில் மாலை 4 மணி அளவில் திடீர் என சாலையில் பிளவு ஏற்பட்டதால் அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு பெண்கள் புதைகுழியில் உள்ளே விழுந்தனர்.
அங்கு அமைந்திருந்த சாலையோர வீடியோ கேமராக்களில் பதிவாகிய இந்த அசம்பாவிதம் மக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது.
சாலையில் உள்ள நடைபாதையில் நடந்து கொண்டிருந்த அப்பெண்களை திடீரென சாலைகள் பிளந்து சில மணிதுளிகளில் புதைகுழியின் உள்ளே விழுந்தனர். அங்குள்ள மக்கள் வந்து காப்பாற்றியதால் லேசான காயங்களுடன் அப்பெண்கள் உயிர் தப்பினார்.
அப்போது சம்பவமிடத்தில் கிடைத்த வீடியோ பதிவை வைத்து உள்ளே விழுந்த பெண்களை டாக்டர் சுசன் குடேய் பாலிக் மற்றும் செவிலியர் ஓஸலேம் துய்மாஸ் என அடையாளம் காணப்பட்டனர்.
இந்நிலையில் அந்த வீடியோ காட்சியை துருக்கி அரசு வெளியிட்டது. சில மணி நேரத்தில் அந்த வீடியோ காட்சிகள் வைரல் ஆனது. போலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த பிளவு எதனால் ஏற்பட்டது என்பதை கண்டறிய உள்ளனர்.
இதேபோல், கடந்த ஆகஸ்ட் மாதம் சீனாவில் ஒரு பிளவு ஏற்பட்டதால் 2 கார்கள் உள்ளே விழுந்தது குறிப்பிடத்தக்கது.
Click for more
trending news