Read in English বাংলায় পড়ুন हिंदी में पढ़ें
This Article is From Nov 21, 2019

புகைப்பிடிப்பவரா…? உங்களின் நுரையீரலும் இப்படித்தான் இருக்கும்…! பலகீனமானவர்கள் வீடியோவை பார்க்காதீர்கள்

நுரையீரலை மாற்று அறுவை சிகிச்சைக்காக வெளியில் எடுத்த மருத்துவர்கள் அதிர்ச்சியில் உரைந்து போய்விட்டனர். நுரையிரல் தாரில் முக்கி எடுத்தது போல் இருந்தது. ஏனென்றால் அந்த நபர் 30 ஆண்டுகளாக தொடர்ந்து நாள் ஒன்றுக்கு ஒரு பாக்கெட் என்ற கணக்கில் புகை பிடித்துள்ளார்.

Advertisement
விசித்திரம் Edited by

நீங்கள் புகைப்பிடிப்பவராக இருந்து இறந்த பிறகு உடல் உறுப்பு தானம் செய்ய நினைத்தாலும் உங்கள் நுரையீரல் ஏற்றுக்கொள்ளப்படாது

நீங்கள் தொடர்ச்சியாக புகைபிடிக்கும் நபரா…? அப்படியென்றால் நீங்கள் நிச்சயம் இந்த செய்தியை படிக்கவேண்டும். சீனாவில் ஒருவர் தன் இறப்புக்கு பின் உடல் உறுப்பை தானம் செய்யும் படி கேட்டுக் கொண்டுள்ளார். 52 வயதான நபரின் நுரையீரலை மாற்று அறுவை சிகிச்சைக்காக வெளியில் எடுத்த மருத்துவர்கள் அதிர்ச்சியில் உரைந்து போய்விட்டனர். நுரையிரல் தாரில் முக்கி எடுத்தது போல் இருந்தது. 

ஏனென்றால் அந்த நபர் 30 ஆண்டுகளாக தொடர்ந்து நாள் ஒன்றுக்கு ஒரு பாக்கெட் என்ற கணக்கில் புகை பிடித்துள்ளார். அறுவை சிகிச்சை நிபுணர்களால் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோ சமூக ஊடகங்களில் 25 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. நெட்டிசன்கள் இதை எக்காலத்திற்குமான சிறந்த புகை எதிர்ப்பு விளம்பரம் என்று பெயரிட்டுள்ளனர்.

கீழே உள்ள வீடியோவை பாருங்கள். பலகீனமானவர்கள் பார்ப்பதை தவிர்த்து விடுங்கள்.

  .  

Advertisement

அந்த வீடியோவில், டாக்டர் செஜ் ஜிங்யுவும் அவரது குழுவும் நுரையீரலைப் பரிசோதித்து, பல ஆண்டுகளாக புகையிலை பயன்படுத்தியதால் கறுத்து வீக்கமடைந்துள்ளதாக கூறுகின்றனர். இந்த நாட்டில் புகைப்பிடிப்பவர்கள் பலருக்கும் நுரையீரல் இப்படித்தான் இருக்கும் என்று கூறுகின்றனர். இந்த நுரையீரலை மாற்று அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்த முடியாது எங்கள் குழு இதை நிராகரித்துள்ளது என்றும் தெரிவித்தார். 

நீங்கள் புகைப்பிடிப்பவராக இருந்து இறந்த பிறகு உடல் உறுப்பு தானம் செய்ய நினைத்தாலும் உங்கள் நுரையீரல் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement