வியாபாரிகள் குப்பைகளை மற்றும் பிளாஸ்டிக்குகளை குப்பை தொட்டிக்குள் போடுவதை தவிர்க்க வேண்டும்.
Puducherry:
புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி கூறுகையில், வியாபாரிகள் தங்கள் கடையின் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக்குகளை பாதாள சாக்கடைக்குள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். நகராட்சி அதிகாரிகள் தினமும் கடைகளை சோதனையிட்டு குப்பைகளை பாதாள சாக்கடையில் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடி வாட்ஸ் அப் மெசேஜ் மூலம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
குப்பை மற்றும் திட கழிவுகளை குப்பை தொட்டிகளில் போட்டால் மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை எடுத்து செல்வார்கள் என்று எல்.ஜி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அரசாங்கம் சங்கங்கள் மூலம் வசிப்பிட பாதாள சாக்கடைகளில் கழிவுகள் மூலம் ஏற்படும் அடைப்பை நீக்க நிதியை திரட்டுவதை பொதுமக்கள் உணர வேண்டும். என்று கிரண் பேடி கூறினார்.
இது குறித்து எல்.ஜி கூறுகையில், வணிகர்கள் சங்கம் பாதள சாக்கடைகளில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை நீக்க நிதியுதவி அளித்து வருவதாக தெரிவித்தது.
இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் வியாபாரிகள், சட்டத்திற்கு அடிபணீவதா அல்லது அபராதம் கட்டுவதா என்பதை அவர்களே முடிவு செய்து கொள்ளட்டுமென்று ஆளுநர் கிரண் பேடி தன்னுடைய வாட்ஸ் அப் மெசேஜில் குறிப்பிட்டார்.