This Article is From Nov 26, 2019

8 ஜீன்ஸ் பேன்ட்டுகளை அணிந்து கொண்டு திருடமுயன்ற பெண்: கையும் களவுமாக மாட்டிய வீடியோ

இணையத்தில் வெளியான வீடியோவில் பெண் ஓய்வறையில் திருடிய ஜீன்ஸ் பேண்டுகளை ஒவ்வொன்றாக கழற்றுகிறார்.

8 ஜீன்ஸ் பேன்ட்டுகளை அணிந்து கொண்டு திருடமுயன்ற பெண்: கையும் களவுமாக மாட்டிய வீடியோ

ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டதிலிருந்து 4.3 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.


வெனிசுலாவில் துணிகடைகளில் நுதனமாக திருடிய பெண் மாட்டிக் கொண்டுள்ளார். அப்பெண் 8 ஜோடி ஜீன்ஸ் பேன்ட்டினை அணிந்து கடையை விட்டு வெளியேற முயன்றபோது பிடிபட்டுள்ளார்.

இணையத்தில் வெளியான வீடியோவில் பெண் ஓய்வறையில் திருடிய ஜீன்ஸ் பேண்டுகளை ஒவ்வொன்றாக கழற்றுகிறார். டெய்லி மெயில் செய்தியின் படி அப்பெண் யாரெனத் தெரியவில்லை. ஆனாலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.  ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டதிலிருந்து 4.3 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். 

ஆகஸ்ட் மாதம் பெண்ணொருவர் குழந்தைக்கான வண்டியை கடத்த முயன்றபோது தன் குழந்தையை மறந்து விட்டுச் சென்ற சம்பவம் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

Click for more trending news


.