This Article is From Jun 22, 2019

அமைச்சருக்கு ஷூ லேஸ் கட்டி விட்ட அரசு அதிகாரி வைரலாகும் வீடியோ...

அமைச்சர் லக்‌ஷ்மி நாராயண் சர்ச்சைகளில் சிக்குவது முதன் முறையல்ல. அனுமான் ஜாட் இனத்தை சேர்ந்தவர் என்று பேசி சர்ச்சையை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

அமைச்சருக்கு ஷூ லேஸ் கட்டி விட்ட அரசு அதிகாரி வைரலாகும் வீடியோ...

அமைச்சருக்கு ஷூ லேஸை கட்டிவிடும் வீடியோ இணையத்தில் வைரல் ஆனது

ஹைலைட்ஸ்

  • Laxmi Narayan got his shoelace tied at a yoga event in Shahjahanpur
  • He is minister of minority affairs and dairy development in UP government
  • He has justified the incident, saying the gesture should be appreciated
New Delhi:

நேற்று உலகம் முழுவதும் யோக தினம் கொண்டாடப்பட்டது. இந்தியாவின் அனைத்து  மாநிலங்களிலும் அந்தந்த மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

உத்திர பிரதேச மாநிலத்தில் ஷாஜஹான்பூரில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றது அம்மாநில சிறுபான்மையின அமைச்சர் லக்‌ஷ்மி நாராயண் கலந்து கொண்டார். அப்போது அவரது ஷூவை அங்குள்ள அரசு அதிகாரி ஒருவர் அவருக்கு ஷூவை மாட்டிவிடு லேஸைகட்டி விட்டார். அமைச்சருக்கு ஷூ லேஸை கட்டிவிடும் வீடியோ இணையத்தி வைரல் ஆனதையடுத்து அவருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன. 

இந்த வீடியோ யோக நிகழ்விற்கு முன்பா அல்லது  நிகழ்ச்சிக்கு பின்பா என்பது தெரியவில்லை 

இந்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்பியபோது ராமனின் செருப்பை வைத்தே ஆட்சி புரிந்த நாடு இது. அதுபோல இதுஒரு சகோதரரின் உதவியாக பாருங்கள், பாராட்டுங்கள் என்று தெரிவித்துள்ளார். 

அமைச்சர் லக்‌ஷ்மி நாராயண் சர்ச்சைகளில் சிக்குவது முதன் முறையல்ல. அனுமான் ஜாட் இனத்தை சேர்ந்தவர் என்று பேசி சர்ச்சையை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

.