கடந்த வாரம், சச்சின் பைலட் தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்குச் சென்ற நிலையில், அது அவர்களுக்கு தற்காலிக நிவாரணம் அளித்தது, இந்த உத்தரவை எதிர்த்து காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தது.
New Delhi: ராஜஸ்தான் வழக்கை உச்சநீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக அனுகுவது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினரிடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு பிரிவினர் உச்ச நீதிமன்றத்தில் இருந்து காங்கிரஸ் வழக்கை திரும்ப பெற்று, இந்த நெருக்கடியை அரசியல் ரீதியாக கையாள வேண்டும் என்று விரும்புகிறது. மற்றொரு பிரிவினர் நீதிமன்றத்தில் வழக்கை தொடர்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனினும், இறுதி முடிவு கட்சியின் உயர் மட்டத்தின் கட்டளைக்கு உட்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம், சச்சின் பைலட் தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்குச் சென்ற நிலையில், அது அவர்களுக்கு தற்காலிக நிவாரணம் அளித்தது, இந்த உத்தரவை எதிர்த்து காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தது. இதனிடையே, உயர் நீதிமன்றம் சச்சின் பைலட் தரப்பினருக்கு பாதுகாப்பை வழங்கியது, சபாநாயகரின் அதிகாரங்கள் தொடர்பான பெரிய அரசியலமைப்பு கேள்விகள் முடிவு செய்யப்படும் வரை சபாநாயகர் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதில், விரைவில் சட்டமன்றத்தை கூட்டும் காங்கிரஸ் முடிவில் தலையிட வாய்ப்புள்ளது.
ஏனெனில், முதல்வர் அசோக் கெலாட் முதல்முறையாக சட்டமன்றத்தை கூட்ட வலியுறுத்திய நிலையில், ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். எதற்காக மறுப்பு தெரிவிக்கப்பட்டது என்பதற்கு ஆறு காரணங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதில் ஒன்றாக, அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஒரு சில காங்கிரஸ் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும் என்றும் இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக கையாள வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து, இரண்டாவது முறையாக ஆளுநருக்கு சட்டசபையை கூட்டக்கோரி வலியுறித்திய முதல்வர் அசோக் கெலாட், அதில் கொரோனா தொடர்பாக குறிப்பிட்டதுடன், நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.