This Article is From Dec 23, 2019

இந்தியர் என்பதை நிரூபியுங்கள் : போராட்டத்திற்கு மாணவர்களுக்கு அழைப்பு விடுத்த ராகுல் காந்தி

Congress protest at Delhi's Raj Ghat: மோடி -அமித் ஷா இந்தியா மீது கட்டவிழ்த்துவிட்ட வெறுப்பு மற்றும் வன்முறையை எதிர்த்து போராட வாருங்கள். என்று அழைப்பு விடுத்திருந்தார்.

இந்தியர் என்பதை நிரூபியுங்கள் : போராட்டத்திற்கு மாணவர்களுக்கு அழைப்பு விடுத்த ராகுல் காந்தி

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து போராட டெல்லியின் ராஜ் காட் வருமாறு ராகுல் காந்தி மக்களை கேட்டுக்கொண்டார்

ஹைலைட்ஸ்

  • Congress party will hold a protest at Delhi's Raj Ghat
  • Rahul Gandhi asks students to come out in large numbers
  • Congress holding protest against amended citizenship law
New Delhi:

மூன்று முஸ்லிம் நாடுகளில் மத ரீதியான  அடிப்படையில் துன்புறுத்தப்பட்ட அகதிகளுக்கான குடியுரிமையை வழங்கும் செயல்முறையை விரைவாக்கும் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி இன்று பிற்பகல் 3 மணிக்கு டெல்லியின் ராஜ் காட் மகாத்மா காந்தியின் நினைவுச் சின்னத்தின் முன் போராட்டம் நடத்தவுள்ளது. 

குடியுரிமை (திருத்த) மசோதா ஒரு வாரத்திற்கு முன்பு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மையுடன் சட்டமான நிலையில் சோனியா காந்தி தலைமையிலான கட்சியின் தலைவர்கள், மகன் எம்.பி ராகுல் காந்தி உட்பட ஏராளமனோர் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தியாவின் அன்பான மாணவர்களே, இந்தியராக உணர்ந்தால் மட்டும் போதாது இது போன்ற சமயங்களில் தான் இந்தியர் என்பதைக் காட்டுவது மிக முக்கியம். இந்தியாவை வெறுப்பால் அழிக்க அனுமதிக்காதீர்கள். இன்று மதியம் 3 மணிக்கு ராஜ்காட்டில் என்னுடன் இணைந்து போராட வாருங்கள். மோடி -அமித் ஷா இந்தியா மீது கட்டவிழ்த்துவிட்ட வெறுப்பு மற்றும் வன்முறையை எதிர்த்து போராட வாருங்கள். என்று அழைப்பு விடுத்திருந்தார். 

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பெரும்பாலும் காங்கிரஸ் தலைவர்கள் இல்லை என்று ஜனதா தள யுனைடெட் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருந்தார். “அனைத்து காங்கிரஸ் முதல்வர்களும் என்.ஆர்.சியை அனுமதிக்க மாட்டோம் என்று கூறிய மற்ற முதல்வர்களுடன் சேரவேண்டும்”என்று ட்வீட் செய்திருந்தார்.

“இல்லையெனில் இந்த அறிக்கைகள் ஒன்றும் அர்த்தமல்ல” என்று கடந்த வாரம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் மீதான ஒடுக்குமுறை தொடர்பாக ஒரு அறிக்கையை சுட்டிக்காட்டி பேசியிருந்தார். 

.