Read in English
This Article is From Feb 28, 2020

“இதுதான் என் வாழ்க்கை… என் முகம்..”- பிளாஸ்டிக் சர்ஜரி பற்றி ஷ்ருதி ஹாசனின் உருக்குமான போஸ்ட்!!

ஷ்ருதி, முன்னதாக போட்ட ஒரு இன்ஸ்டா போஸ்டுக்குப் பலரும், “நீங்க ரொம்ப வயதானவரா தெரியறீங்க”, “ரொம்ப இளைச்சிட்டீங்க” என்பது போல கமென்டுகளை பதிவிட்டிருந்தனர்

Advertisement
Entertainment Edited by

"நமக்கும் மற்றவர்களுக்கும் நாம் செய்யக்கூடி மிகப் பெரிய உதவி, நம் உடல் அளவிலும் மனதளவிலும் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்வதுதான்."

Highlights

  • தனது இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட்-ஐ பகிர்ந்துள்ளார் ஷ்ருதி
  • உடலை வைத்து கேலி செய்வோருக்கு ஷ்ருதி பதிலடி
  • மற்றவர்களுக்காக வாழ்பவள் அல்ல நான்: ஷ்ருதி
New Delhi:

நடிகையும் பாடகியுமான ஷ்ருதி ஹாசனை, சமூக வலைத்தளங்கள் வாயிலாகப் பலரும் தொடர்ந்து கேலி செய்து வந்துள்ளனர். இதனால் மன வருத்தமடைந்த அவர், அனைத்து கேலிக்கும் கிண்டல்களுக்கும் தக்க பதிலடியைக் கொடுக்கும் வகையில் உருக்குமான போஸ்ட் ஒன்றைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

பல நேரங்களில் ஷ்ருதி ஹாசன் செய்து கொண்ட உதடு மற்றும் மூக்குப் பகுதிகளுக்கான பிளாஸ்டிக் சர்ஜரியை வைத்து அவரை ஆன்லைனில் பலர் கிண்டல் செய்து வந்துள்ளனர். அதற்கு ரிப்ளை கொடுக்கும் வகையில் தனது இரண்டு புகைப்படங்களை கொலாஜ் செய்து வெளியிட்டுள்ளார் ஷ்ருதி. 

அந்த போட்டோக்களுடன் அவர், “நான் மற்றவர்களின் பேச்சுகளைக் கேட்டு வாழ்பவள் அல்ல. தொடர்ந்து என்னைச் சிலர், ‘பருமனாகிவிட்டாய்' ‘இளைத்துவிட்டாய்' என்று கமென்ட் அடிப்பதைத் தவிர்க்கலாம். தற்போது நான் எடுத்துள்ள இரண்டு படங்களும் 3 நாள் இடைவெளியில் எடுக்கப்பட்டவை. நான் சொல்ல வருவதைப் பல பெண்களால் உணர்ந்து கொள்ள முடியும். 

Advertisement

எனது ஹார்மோன்களின் கருணையில்தான் எனது மனதையும் உடலையும் சரிவர வைத்திருக்கிறேன். எனது வலியும் உடல் மாற்றமும் சுலபமல்ல. ஆனால், நான் வந்த பயணத்தை என்னால் பகிர்ந்து கொள்ள முடியும். எந்த ஒரு நபரும் இன்னொரு நபர் பற்றி ஒரு முன்முடிவுக்கு வரக்கூடாது. ஆமாம், நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டேன். அதைச் சொல்வதில் எனக்கு எந்த அவமானமும் இல்லை. இதுதான் என் முகம். இதுவே என் வாழ்க்கை. பிளாஸ்டிக் சர்ஜரி பற்றி நான் விளம்பரம் செய்கிறேனா? இல்லை. அதை எதிர்க்கிறேனா? இல்லை. இது நான் எடுத்த முடிவு.

நமக்கும் மற்றவர்களுக்கும் நாம் செய்யக்கூடி மிகப் பெரிய உதவி, நம் உடல் அளவிலும் மனதளவிலும் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்வதுதான். அன்பைப் பரப்புங்கள். என்னை ஒவ்வொரு நாளும் நானே அதிகம் நேசிக்கக் கற்றுக் கொள்கிறேன். ஏனென்றால், என் வாழ்க்கையின் மிகப் பெரிய காதல் கதை, என்னுடன் நானே கொண்டுள்ளதுதான். உங்களுக்கும் அப்படியே இருக்கும் என்று நினைக்கிறேன்,” என்று உருகி உருகி எழுதியுள்ளார். 

Advertisement

ஷ்ருதியின் போஸ்ட் இதோ:

Advertisement

ஷ்ருதி, முன்னதாக போட்ட ஒரு இன்ஸ்டா போஸ்டுக்குப் பலரும், “நீங்க ரொம்ப வயதானவரா தெரியறீங்க”, “ரொம்ப இளைச்சிட்டீங்க” என்பது போல கமென்டுகளை பதிவிட்டிருந்தனர். அதற்குத்தான் ஷ்ருதி, இப்படிப்பட்ட நீண்ட விளக்கத்தைக் கொடுத்துள்ளார். 

அந்த போஸ்ட் இதோ:

Advertisement

Advertisement