Srinagar: ஶ்ரீநகர்: வடக்கு காஷ்மீர், குல்காம் கிராமத்தை சேர்ந்த உமர் பரூக் என்ற பத்து வயது சிறுவன், கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
கிராமத்தில் உள்ள ஆப்பிள் தோட்டத்தில், கை வெட்டப்பட்டு, பாதி உடல் எரிந்த நிலையில் இருந்த சிறுவனின் சடலத்தை காவல் துறையினர் கண்டெடுத்தனர். இந்த செய்தியை அறிந்த ஊர் மக்கள், சிறுவனுக்கு நேர்ந்த கொடூரமான சம்பவத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுவனின் கொலை குறித்து விசாரணை நடத்துமாறு காவல் துறையினரை ஊர் மக்கள் வற்புறுத்தினர். ஆத்திரம் அடைந்த ஊர் மக்கள், காவல் துறை கான்ஸ்டபிளை மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். குற்றவாளிகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஷப்கத் ஹூசேயின், ஊர் மக்களிடம் இருந்து கான்ஸ்டபிளை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தார்.
கிராமத்தில் வன்முறைகள் ஏற்படாமல் இருக்க, வெள்ளிக்கிழமை அன்று காஷ்மீர் குப்வார நகரம் காவல் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். மொபைல் இணையத்தள சேவையும் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)