This Article is From Jan 28, 2019

மைக்குடன் பெண்ணின் துப்பட்டாவை பறித்து சர்ச்சையில் சிக்கிய சித்தராமையா!

இதுதொடர்பாக வெளியான வீடியோவில், பச்சை நிற உடை அணிந்த பெண் ஒருவர் சித்தராமையாவை நோக்கி சரமாரி கேள்வி எழுப்பினார்.

பெண்ணின் தொடர் கேள்வியால் கோபமடைந்த சித்தராமையா, அவரிடம் மைக்கை பிறித்தார்.

New Delhi:

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா தன்னிடம் கேள்வி எழுப்பிய பெண்ணிடம் இருந்து மைக்கை பறித்த போது, அந்த பெண்ணின் துப்பட்டாவும் கையோடு வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சித்தராமையாவின் மகன் யஷீந்திராவின் தொகுதியான வருணா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்றார். அங்கு மக்களை சந்தித்த சித்தராமையா, குறைகளை கேட்டார். அப்போது, கூட்ட பச்சை நிற ஆடை அணிந்த பெண் ஒருவர், அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வான சித்தராமையாவின் மகனை தேர்தலின் போது மட்டுமே பார்த்ததாக குற்றம்சாட்டினார்.

இதனால், கோபமடைந்த சித்தராமையா, அந்தப் பெண்ணிடம் இருந்த மைக்கை, ஆவேசத்துடன் பறித்து அதட்டி உட்கார வைத்தார். அப்போது, மைக் உடன் அந்த பெண்ணின் துப்பட்டாவும் சித்தராமையா கையோடு வந்தது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. இந்நிலையில், சித்தராமையாவின் இந்த செயலுக்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், சித்தராமையா பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும், பெண்களை காங்கிரஸ் கட்சியினர் இப்படி தான் பார்க்கின்றனர் என்றும் அவர்கள் ஒரு குடும்பத்தை சேர்ந்த பெண்களை மட்டுமே மதிக்கின்றனர் என்றும் குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா, நடந்த அந்த சம்பவம் ஒரு எதிர்பாராத விபத்து என்று தெரிவித்துள்ளார். குறைகளை தெரிவிக்க அந்த பெண் அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் அதனை தடுக்கவே தான் முயன்றதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அந்த பெண்ணை தனக்கு 15 ஆண்டுகளுக்கு மேல் நன்கு தெரியும் என்றும் அவர் தனது சகோதரி போன்றவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சமந்தப்பட்ட ஜமாலா என்ற அந்த பெண் கூறும்போது, தனக்கும் சித்தராமையாவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறினார். சித்தராமையா சிறந்த முதல்வர் ஆவார். நான் அவரிடம் பேசும் போது மிகுந்த கோபத்துடன் பேசினேன். அவ்வாறு பேசும் போது முன்னாள் இருந்த மேஜையை தட்டினேன். இதுவே அவருக்கு கோபத்தை துண்டியது. நான் முன்னாள் முதல்வரான அவரிடம் அவ்வாறு பேசியிருக்க கூடாது என்று கூறினார்.

.