Read in English
This Article is From Aug 06, 2018

கலிபோர்னியாவில் "திரும்பிப் போ" என்று கூறி சீக்கியர் மீது இனவெறி தாக்குதல்

உள்ளூர் தேர்தல் பிரச்சாரம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த சீக்கியரை, இரண்டு வெள்ளையர்கள் தாக்கியுள்ளனர்

Advertisement
Indians Abroad
New York:

நியூயார்க்: அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் சீக்கியர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது

உள்ளூர் தேர்தல் பிரச்சாரம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த சீக்கியரை, இரண்டு வெள்ளையர்கள் தாக்கியுள்ளனர். “இங்கே உன்னை யாரும் வரவேற்கவில்லை. உன் நாட்டிற்கு திரும்பி செல்” என்று கூறியப்படி தாக்குதல் நடத்தி உள்ளனர். மேலும், சீக்கியரின் வாகனத்தையும் சேதப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இதனை அடுத்து, கலிபோர்னியா மாகாண காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு பேர், சீக்கியரின் தலையில் அடித்துள்ளது தெரிய வந்துள்ளது. சீக்கியர்கள் அணியும் பாரம்பரிய தலைப்பாகையை அவர் அணிந்து இருந்ததால், பலமான காயங்களில் இருந்து தப்பித்தாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்

எனினும், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், காயமடைந்த சீக்கியரை மருத்துவமனையில் அனுமதித்தனர். சீக்கியரின் வாகனத்தில் “உன் நாட்டிற்கு திரும்பிப் போ” என்ற வாசகத்தை தாக்குதல் நடத்தியவர்கள் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

சேதமடைந்த வாகனத்தின் புகைப்படம் குறித்து சமூக வளைத்தளங்களில் விவாதம் நடைப்பெற்று வருகிறது. குறிப்பிட்ட சமூகத்தினர் மீது இனவெறி தாக்குதல் நடத்தியதை கண்டித்து பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்

தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகத்திற்கு உரிய நபர்களை காவல் துறையினர் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Advertisement