This Article is From Jun 20, 2018

சிக்கிம் அரசு தூதராக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு!

உலக புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், சிக்கிம் மாநிலத்தின் அதிகாரபூர்வமான தூதராக அறிவிக்கப்பட்டு உள்ளார். 

சிக்கிம் அரசு தூதராக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு!

ஹைலைட்ஸ்

  • இது குறித்து சிக்கிம் தலைமைச் செயலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்
  • முன்னர் சிக்கிம் சுற்றுலாவுக்கு ரகுமான் விளம்ரத் தூதராக இருந்தார்
  • தற்போது, மாநிலத் தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார்
உலக புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், சிக்கிம் மாநிலத்தின் அதிகாரபூர்வமான தூதராக அறிவிக்கப்பட்டு உள்ளார். 

இந்த விஷயம் குறித்து சிக்கிம் மாநிலத்தின் தலைமைச் செயலர் ஏ.கே.சீனிவாசன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஏ.ஆர்.ரகுமான் சிக்கிம் மாநில தூதராக செயல்படுவார். அவர், சிக்கிம் மாநிலம் அடைந்துள்ள வளர்ச்சி குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் எடுத்துக் கூறுவார். சிக்கிமின் இயற்கை அழகால் கடந்த 20 ஆண்டுகளில் உலகின் தலை சிறந்த சுற்றுலாத் தளமாக உருவெடுத்துள்ளது. இகோ-டூரிஸத்தின் முன்னோடியாக சிக்கிம் உள்ளது. மேலும், நாட்டிலேயே முழுக்க முழுக்க வேளாண் விவசாயம் செய்யும் முதல் மாநிலமாக சிக்கிம் மாறியுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டின் முற்பகுதியில் சிக்கிமின் சுற்றுலா மற்றும் வர்த்தகத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் விளம்ரத் தூதராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், அம்மாநிலத்துக்கே தூதராக அறிவிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 




(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
.