This Article is From Aug 14, 2018

‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ முறையை செயல்படுத்த முடியாது - தேர்தல் ஆணையம் அதிரடி

நாடாளுமன்றத் தேர்தலுடன் அனைத்து மாநில சட்டமன்ற தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்பது மத்திய அரசின் நிலைப்பாடு

New Delhi:

புதுடில்லி: நாடாளுமன்றத் தேர்தலுடன் அனைத்து மாநில சட்டமன்ற தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்பது மத்திய அரசின் நிலைப்பாடு. எனினும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த இயலாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

கடந்த திங்கட்கிழமை அன்று, ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை செயல்படுத்த வேண்டும் என்று பாஜக தலைவர் அமித் ஷா, சட்ட ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அமல்படுத்த, பிரதமர் நரேந்திர மோடியும் முழு ஆதரவை அளித்து வந்தார்.

இந்நிலையில், “ஒரே தேசம் ஒரே தேர்தல் முறையை செயல்படுத்த, அரசியலமைப்பு திருத்தங்கள் அவசியமானது. மேலும், கூடுதல் காவல் படையினர், தேர்தல் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். அதனால், இந்த முறையை செயல்படுத்தும் திட்டம் இல்லை” என்று தேர்தல் ஆணையர் ஓ.பி ராவத் தெரிவித்துள்ளார்

2019 ஆம் ஆண்டு நடைப்பெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன், விவிபிஏடி, ஈவிஎம் வாக்கு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளன. மேலும், செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் 13.96 லட்சம் ஈவிஎம் இயந்திரங்களும், 9.3 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 16.15 லட்சம் விவிபிஏடி இயந்திரங்கள் தயாராக உள்ளன என்று ஓ.பி ராவத் தெரிவித்துள்ளார்

ஒரே நேரத்தில், நாடாளுமன்ற, அனைத்து மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களை நடத்த இரண்டு மடங்கு எண்ணிக்கையிலான வாக்கு இயந்திரங்கள் தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

.