This Article is From Feb 10, 2020

பாஜக அரசு பதவியேற்றதில் இருந்து இடஒதுக்கீடு கொள்கைக்கு ஆபத்து தான்: ஸ்டாலின்

மத்திய பாஜக அரசு பதவியேற்றதில் இருந்து இடஒதுக்கீடு கொள்கைக்கு ஆபத்து ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது.

பாஜக அரசு பதவியேற்றதில் இருந்து இடஒதுக்கீடு கொள்கைக்கு ஆபத்து தான்: ஸ்டாலின்

சமூக நீதிக்கு சிறிதும் பாதிப்பு ஏற்படாமல், பாதுகாத்திட மத்திய பா.ஜ.க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்

பாஜக அரசு பதவியேற்றதில் இருந்து இடஒதுக்கீடு கொள்கைக்கு ஆபத்து தான் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

அரசுப் பணிகளில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு உத்தரவிட முடியாது என்றும், பதவி உயர்வு, பணி ஆகியவற்றை இடஒதுக்கீடு அடிப்படையில் வழங்கத் தேவையில்லை எனவும் பொதுநல வழக்கு ஒன்றின் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் குரலெழுப்பி வருகின்றன.



இந்நிலையில், இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் கூறியதாவது, “மத்திய பாஜக அரசு பதவியேற்றதில் இருந்து இடஒதுக்கீடு கொள்கைக்கு ஆபத்து ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது.

மத்திய அரசில் உள்ள அமைச்சர்களும், அந்த மத்திய அரசை அனைத்து வகைகளிலும் கட்டுப்படுத்தும் சங்பரிவாரங்களும், இட ஒதுக்கீட்டுக்கு எதிராக, தொடர்ந்து தெரிவித்து வரும் கருத்துகள் பல்வேறு குழப்பங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் வித்திட்டு வருகிறது.

பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியினப் பிரிவினருக்கான இடஒதுக்கீடு கொள்கையில் எவ்வித குழப்பத்திற்கும் இடமளிக்காமல் - சமூக நீதிக்கு சிறிதும் பாதிப்பு ஏற்படாமல், பாதுகாத்திட மத்திய பா.ஜ.க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
 

.