This Article is From Aug 27, 2018

ஆசிய போட்டிகள்: இறுதி போட்டியில் தங்கம் வெல்வாரா பி.வி சிந்து?

விறுவிறுப்பான இந்த போட்டியில், 21-17, 15-21, 21-10 என்ற செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்றார்

Advertisement
இந்தியா Posted by

ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைப்பெற்று வருகின்றன. 9வது நாளான இன்று, பெண்களுக்கான பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவு அரை இறுதி போட்டி நடைப்பெற்றது. இதில், இந்தியாவின் பி.வி சிந்து, ஜப்பானின் அகானே யமாகுச்சே ஆகியோர் மோதினர்.

விறுவிறுப்பான இந்த போட்டியில், 21-17, 15-21, 21-10 என்ற செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்றார். இதன் மூலம், ஆசிய விளையாட்டு பெண்களுக்கான பாட்மிண்டன் போட்டியின் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

அடுத்து நடக்க இருக்கும் இறுதி போட்டியில், பாட்மிண்டன் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் சீன தைபேயின் டாய் சுயிங்கை எதிர்க்கொள்கிறார் பி.வி சிந்து. இறுதி போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் பெற்று தருவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Advertisement

இன்று நடைப்பெற்ற மற்றொரு அரை இறுதி போட்டியில், இந்தியாவின் சாய்னா நெஹ்வால் தோல்வியடைந்தார். இதனால், வெண்கலப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement