Read in English
This Article is From Jun 02, 2018

சிங்கப்பூர் மலருக்கு மோடியின் பெயர் சூட்டி புகழாரம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தோனேசியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய ஆசிய நாடுகளுக்கு ஐந்து நாட்கள் அரசு முறை பயணமாக சென்றுள்ளார்

Advertisement
உலகம்

மோடியுடன் சிங்கப்பூர் அமைச்சர்

Highlights

  • 5 நாள் அரசு முறை பயணமாக சென்றுள்ளார் மோடி
  • இன்று அவர் சிங்கப்பூரில் இருக்கிறார்
  • முன்னர் சிங்கப்பூரில் இருக்கும் மாரியம்மன் கோயிலுக்குச் சென்றுள்ளார்
Singapore:

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தோனேசியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய ஆசிய நாடுகளுக்கு ஐந்து நாட்கள் அரசு முறை பயணமாக சென்றுள்ளார். இன்று அவர் சிங்கப்பூரில் இருக்கிறார். இந்நிலையில், அவரின் வருகையை சிறப்பிக்கும் வகையில், அங்குள்ள ஆர்க்கிட் மலர் ஒன்றுக்கு `டெண்ட்ரோபிரியம் நரேந்திர மோடி' என்று பெயரிடிப்பட்டு உள்ளது. 

 

இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம், `சிங்கப்பூரின் தேசிக ஆர்க்கிட் பூங்காவுக்கு இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி சென்றிருந்தார். அவரின் வருகையையொட்டி, அங்குள்ள ஒரு ஆர்க்கிட் மலருக்கு, டெண்ட்ரோபிரியம் நரேந்திர மோடி என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது' என்று தெரிவித்து உள்ளது.

மோடி ஆர்க்கிட் மலர் இருக்கும் மலர் பூங்கா, யுனெஸ்கோவால் பாரம்பரியமிக்க இடங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

பூங்காவுக்கு வருவதற்கு முன்னர் மோடி, சிங்கப்பூரில் இருக்கும் மாரியம்மன் கோயிலுக்கு வழிபாடு நடத்த சென்றுள்ளார். இதுதான் தெற்கு ஆசியாவில் இருக்கும் மிகப் பழமையான இந்து கோயில் என்ற சிறப்பு வாய்ந்தது. பிரதமர் மோடியுடன், சிங்கப்பூரின் கலாசார அமைச்சர் க்ரேஸ் ஈன் அவர்களும் உடன் இருந்தார். மேலும் மோடி, சிங்கப்பூரின் தெற்கு பால சாலையின் சைனா டவுனிற்கு சென்றார். அப்போது, அங்கிருக்கும் சுலியா மசூதிக்குச் சென்றார் மோடி.

 

Advertisement