"பெண்களின் மார்பகங்களை மறைத்துப் பார்க்க வேண்டிய ஆண்களுக்கு.. சரியாக தாய்ப்பால் கொடுத்தது போல் தெரியவில்லை." - சின்மயி
பெண் ஒருவர் ஸ்விக்கி டெலிவரி பாய் ஒருவர் தன்னை 'ஷால் அணியுமாறு அறிவுரை' செய்தது தொடர்பாக தனது ட்வீட்டரில் விமர்சித்து பதிவிட்டிருந்தார். இதற்கு, நெட்டிசன்கள் பலரும் அந்த பெண்ணை கேலி செய்து பதில் பதிவிட்டிருந்தனர். இதனை பார்த்து கொதித்தெழுந்த பிரபல பின்னணி பாடகி சின்மயி, அவர்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த பெண் ஒருவர், உணவு டெலிவரி செய்ய வந்த ஸ்விக்கி பாய், தனது உடை குறித்து அறிவுரை வழங்கி சென்றது குறித்து விமர்சித்து தனது ட்வீட்டரில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் சமூகவலைதளங்களில் ஆண்கள் பலரும் அவரை கடுமையாக சாடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அந்த பெண் தனது ட்வீட்டர் பதிவில் ஸ்விக்கி நிறுவனத்தை குறிப்பிட்டு, உங்கள் ஊழியர்களால் அவர்களது வேலையை மட்டும் பார்த்து கொண்டு இருக்க முடியாதா? உங்கள் நிறுவனத்தை சேர்ந்த டெலிவரி பாய் ஒருவர் நான் வசிக்கும் எனது வீட்டிற்கு வந்து, 'ஷால் அணியுங்கள்' என்று அறிவுரை வழங்கி செல்கிறார். இது அவர்களுக்கு முக்கியமா? நாங்கள் அவர்களுக்கு பழக்க வழங்கங்களையும் கற்பிக்க வேண்டுமா?
நாங்கள் எப்படி உடை அணிய வேண்டும் என்று சொல்ல இவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது? அதுவும் நான் வசிக்கும் எனது சொந்த வீட்டிற்கே, வந்து நான் எப்படி உடை அணிய வேண்டும் என்று கூறுகிறார் என அந்த பெண் பதிவில் விமர்சித்திருந்தார்.
அந்த பெண்ணின் இந்த ட்வீட்டர் பதிவு வைரலானதை தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் அந்த பெண்ணை சமூகவலைதளங்களில் கேலி செய்து வந்தனர். இதற்கு பதிலளிக்கு வகையில் அந்த பெண், 'இந்த விவகாரத்தை கேலி செய்யும் அனைவரையும் நான் பிளாக் செய்வேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு பிரபல பின்னணி பாடகி சின்மயி கண்ணில் தென்படவே, அந்த பெண்ணிற்கு ஆதரவு அளிக்கும் வகையில் அவர் கொதித்தெழுந்துள்ளார்.
"பெண்களின் மார்பகங்களை மறைத்துப் பார்க்க வேண்டிய ஆண்களுக்கு.. சரியாக தாய்ப்பால் கொடுத்தது போல் தெரியவில்லை." என்று அந்த பெண்ணை கேலி செய்தவர்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அடுத்தடுத்தத பதவில் சின்மயி கூறியதாவது, 'ஷால் அணிவது என்பது தொடர்பான பெண்ணின் ட்வீட்டர் பதிவுக்கு உங்களிடம் இருந்து வந்த பதில்கள் இவை... உங்களுக்கு தமிழ் தெரியும் என்றால், இதனை படித்தால் இங்கு நம்மை சுற்றி என்ன விஷயங்கள் இருக்கின்றது என்பது உங்களுக்கு தெரியவரும்.
'துப்பட்டா அணியாத பெண்கள், கற்பழிப்பிதற்கு அழைப்பு விடுப்பதாக சிலர் நம்புகிறார்கள்'.. நிச்சயமாக ட்வீட்டர் இந்த பதிவை அவதூறாக காணவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு ட்வீட்டர் பயனரை குறிப்பிட்டு சாடிய சின்மயி, 'துப்பட்டா அணிய அறிவுரை வழங்கிய ஸ்விக்கி பாயை நியாயப்படுத்தி அவர் செய்தது சரியானது என்றும், இதற்காக அந்த பெண்ணை ஒழுங்காக இருக்கும்படி அவரை கேட்டுக்கொள்வது நியாயம் என்றும் நம்புவதே இங்கு பரிதாபகரமாக பிரச்சினை' என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், உங்கள் வீடு எப்படி, ஒரு துப்புரவு பணியாளர்கள், ஓட்டுநர்கள், சமையல்காரர்கள், கொரியர் டெலிவரி செய்பவர்கள் உள்ளிட்டவர்களுக்கு பணிபுரியும் இடமாக இருக்கிறதோ அதேபோன்றதே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.