சத்தீஷ்கர் மாநில பிரச்சார கூட்டத்தில் பேசிய மோடி
Raipur: சத்தீஸ்கர் மாநில பிரச்சாரத்தில் தலித் தலைவர் சீதாராம் கேசரியை கட்சியை விட்டு வெளியேற்றித்தான் சோனியா காந்தி தனக்கான பாதையை உருவாக்கினார். அதன்பின் காங்கிரஸ் கட்சி சீரழிந்தது என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் நடைபெறுவதையொட்டி தேசிய கட்சிகளான பாஜகவும் காங்கிரஸும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. முதல்கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் 2-வது கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் கருத்துக்கணிப்புகள் பலவும் காங்கிரஸ்தான் வெற்றி பெறும் என்றும் தேர்தலில் வெற்றி பெற பாஜகவுக்கும் காங்கிரஸ்க்கும் சிறு நூலிழை அளவே இடைவெளி என்று குறிப்பிட்டிருந்தன.
தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியினர், காங்கிரஸ் கட்சியின் நேரு-காந்தி போட்ட அரசியல் அடித்தளத்தினால்தான் ‘டீ விற்ற'சாதாரண நபர் இந்திய அரசியலில் உயர்ந்த பதவியை அடைந்துள்ளார் என்று பேசியிருந்தனர். இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரதமர் இன்று மகாசமுண்ட்டில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் “நேரு குடும்பத்தினரைத் தவிர்த்து வேறு யாரேனும் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்று ஐந்து ஆண்டுகள் முழுமையாக இருந்தால் ஒரு ‘டீ விற்பவரை' பிரதமராக மாற்ற பாதை வகுத்தது நேருதான் என்பதை ஒப்புக் கொள்கிறேன்” என்று பேசினார்.
மேலும், நேர்மையான, கடின உழைப்பாளாராக இருந்த தலித் தலைவர் சீதாராம் கேசரியை ஒரு குடும்பம் மோசமாக நடத்தியதை இந்தியா ஒருபோதும் மறக்காது என்று கடுமையாக சாடினார்.