Read in English
This Article is From Aug 31, 2019

காஷ்மீர் (Kashmir) நிலைமை அரசு சொல்வதற்கு தலைகீழாக உள்ளது- நேரில் சென்ற சீதாராம் யெச்சூரி பேட்டி!

கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி, ஜம்மூ காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது மத்திய அரசு.

Advertisement
இந்தியா Edited by

நீதிமன்றம், ‘இந்தப் பயணத்தின்போது எந்தவித அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது’ என்றும் யெச்சூரிக்கு அறிவுறுத்தியிருந்தது. 

New Delhi:

சிபிஐ(எம்) கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, உச்ச நீதிமன்றத்தின் அனுமதிக்குப் பிறகு காஷ்மீருக்கு சென்று, திரும்பியுள்ளார். அவர் காஷ்மீரிலிருந்து திரும்பியதைத் தொடர்ந்து, “அரசு சொல்வதற்கும் அங்கிருக்கும் நிலைமைக்கும் சம்பந்தமில்லை”  எனத் தெரிவித்துள்ளார். 

உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் தனது கட்சி சகாவான முகமது யூசஃப் டாரிகாமியை சந்திப்பதற்காக யெச்சூரி, காஷ்மீருக்கு செல்ல முயன்றார். அவருக்கு அனுமதி கொடுக்கப்படாததைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் இது குறித்து முறையிட்டார். இந்நிலையில் அவர் யூசஃபைப் பார்த்துவிட்டு, திரும்பியுள்ளார். காஷ்மீர் நிலைமை குறித்து நீதிமன்றத்தில், விரிவான அறிக்கை சமர்பிக்கப் போவதாகவும் யெச்சூரி கூறியுள்ளார். 

முன்னதாக யெச்சூரி, நீதிமன்றத்தில், டாரிகாமியை நேரில் ஒப்படைக்குமாறு ‘ஹேபியஸ் கார்ப்பஸ்' மனுவைத் தாக்கல் செய்தார். இதையடுத்து அவரை காஷ்மீருக்கு நேரில் சென்று டாரிகாமியைப் பார்த்துவிட்டு வரும்படி உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. அதே நேரத்தில் நீதிமன்றம், ‘இந்தப் பயணத்தின்போது எந்தவித அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது' என்றும் அறிவுறுத்தியிருந்தது. 

Advertisement

கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி, ஜம்மூ காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது மத்திய அரசு. மேலும் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்து உத்தரவிட்டது. அப்போதிலிருந்து 5 முறை எம்.எல்.ஏ-வான டாரிகாமி, வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். 

“நான் டாரிகாமியை நேரில் சென்று பார்த்தேன். அவரின் உடல்நிலை குறித்தும் தெரிந்துகொண்டேன். அது குறித்தும் காஷ்மீரின் நிலை குறித்தும் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வேன். காஷ்மீரில் மத்திய அரசு சொல்வதற்கு எதிர்மறையான நிலையே இருக்கிறது” என்று தனது விசிட்டுக்குப் பின்னர் கூறினார் சீதாராம் யெச்சூரி.

Advertisement

டாரிகாமியைப் பார்க்க ஸ்ரீநகருக்குச் சென்றபோது, தன்னுடன் அனைத்து நேரங்களிலும் காவலுக்கு ஆள் இருந்ததாகவும், வேறு யாரையும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்றும் சீதாராம் யெச்சூரி விளக்கினார். இன்று உச்ச நீதிமன்றத்தில் தனது அறிக்கையை யெச்சூரி சமர்பிக்க வாய்ப்புள்ளது. 


 

Advertisement