Chennai: சிவகங்கை மாவட்டத்தில் காது கேளாத 19 வயதுப் பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
சிவகங்கையில் தனது குடிசை வீட்டில் நேற்று தனியாக குளித்துக் கொண்டிருந்துள்ளார் பாதிக்கப்பட்ட பெண். கூலித் தொழிலாளிகளான அவரது பெற்றோர்களை தினசரி பணிக்குச் சென்றுள்ளனர். அவரது சகோதரர் மற்றும் சகோதரியும் சம்பவம் நடந்த போது வெளியே இருந்துள்ளனர். அந்நேரத்தில் பெண்ணின் வீட்டுக்கு வந்த மர்ம நபர் அவரைத் தலையில் தாக்கி, வீட்டிலிருந்து இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது. இறந்த நிலையில் அந்தப் பெண்ணின் உடல் அவரது வீட்டிலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் கிடந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு தொடர்ந்து விசாரித்து வருகிறது போலீஸ். ஆனால், யாரையும் இதுவரை காவல்துறை கைது செய்யவில்லை.
இன்று மாலைக்குள் பெண்ணின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.