This Article is From Mar 30, 2019

சேற்றில் 2 நாட்களாக சிக்கித் தவித்த 6 யானைக் குட்டிகள் மீட்பு!!

சில மணி நேர போராட்டத்திற்கு பின்னர் யானைக் குட்டிகளை வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.

சேற்றில் 2 நாட்களாக சிக்கித் தவித்த 6 யானைக் குட்டிகள் மீட்பு!!

வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது யானைக்குட்டிகள் தென்பட்டன.

Bangkok:

தாய்லாந்து வனப்பகுதியில் பெற்றோரை பிரிந்து சேற்றில் சிக்கித் தவித்த யானைக்குட்டிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன.

பேங்காக்கின் கிழக்குப் பகுதியில் தேசிய வன உயிரியல் சரணாலயம் உள்ளது. இங்கு வனத்துறை அதிகாரிகள் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது யானைக் குட்டிகள் பிளிறுத் சத்தத்தை கேட்டு, சத்தம் வந்த இடத்திற்கு சென்றனர். அப்போது 6 யானைக் குட்டிகள் சேற்றுக்குள் சிக்கி தவிப்பதை காண முடிந்தது.

7k6fbiao

இதையடுத்து சில மணி நேர போராட்டத்திற்கு பின்னர் யானைக் குட்டிகளை வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். யானைகள் கூட்டமாக வந்தபோது, அவற்றின் குட்டிகள் சேற்றுக்குள் சிக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது.

குட்டி யானைகளின் கால்கள் வலுவிழந்ததாக தெரிவித்த வனத்துறையினர், அவை குறைந்தது 2 நாட்களாக சேற்றுக்குள் சிக்கியிருக்கலாம் என்று கூறினர்.

தாய்லாந்து நாடு யானைகளுக்கு பெயர் போனது. இங்கு கடந்த 1850-ல் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி சுமார் ஒரு லட்சம் யானைகள் இருந்தன. தற்போதைய நிலவரப்படி 2 ஆயிரத்து 700 யானைகள் மட்டுமே இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா பிரியர்களின் மகிழ்ச்சிக்காக யானைகள் வேட்டையாடப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

.