குளிர் பாதிக்கப்பட்ட மிட்வெஸ்ட் மாகாணங்களில் இதுவரை ஆறு பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Madison, Wisconsin: அமெரிக்காவின் மிட்வெஸ்ட் பகுதி கடும் குளிரை சந்தித்து வருகிறது. 10 லட்சத்துக்கும் அதிகமானோர் ஆர்டிக் பகுதியில் நிலவும் அளவுக்கு குளிரை சந்தித்து வருகின்றனர். வெப்பநிலை மைனஸ் 50 டிகிரிக்கும் கீழே குறைந்துள்ளது. இந்த பனி காரணமாக பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நினைத்து பார்க்க முடியாத அளவு குளிர் அங்கு நிலவி வருகிறது. எரிவாயு குழாய்கள் மற்றும் மின் இணைப்புகள் உறைந்து போய் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. விஸ்கான்சின் மற்றும் லோவா பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் உறைந்து மூக்குகளில் ரத்தம் வருமளவுக்கு குளிர் மிகவும் அபாயகரமாக உள்ளது.
குளிர் பாதிக்கப்பட்ட மிட்வெஸ்ட் மாகாணங்களில் இதுவரை ஆறு பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாகாண கவர்னர்கள் இந்த பகுதிகளில் அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளனர். அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விஸ்கான்சின் கவர்னர் தோனி இவர்ஸ் " நான் மக்களுக்கு இந்த வானிலை குறித்து எச்சரித்தேன். வெளியூர்களுக்கு செல்லவும் அறிவுரை கூறினேன் என்றார்.
அலஸ்காவின் வட துருவத்தில் பல பகுதிகளில் வெப்பநிலை மைன்ஸ் 48 லிருந்து மைனஸ் 65 டிகிரி வரை குறைந்துள்ளது. உலகின் குளிர் நிறைந்த பகுதியாக மாறியுள்ளது.
மிட்சிகனில் வரலாறு காணாத உறைபனி காணப்படுகிறது. இதனால் மிட்சிகன் பல்கலைக்கழகம் வகுப்புகளை ரத்து செய்துள்ளது.
மினசோட்டா முதல் மிட்சிகன் வரையிலான விமான போக்குவரத்தில் பல இடையூறுகள் ஏற்பட்டுள்ளதால், 1000க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மிட்வெஸ்ட்டின் வடபகுதியில் அதிக குளிர் நிலவி வருகிறது.
கரேன் ஆன்ரோ மாடிசன் அமைச்சரக அதிகாரி கூறும் போது "அரசும், தன்னார்வ நிறுவனங்களும் மக்காலுக்கு அத்தியாவசிய தேவைகளை வழங்கி உதவி வருகிறாது" என்று கூறினார். வீடுகளை இழந்த மக்களை இது மனதளவில் பாதித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
சிலர் தங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்தனர். மைனஸ் 24 டிகிரியில் இருந்த அதே பகுதி காற்று வீசும் போது மைனஸ் 48 டிகிரியாக வீசியது.
இங்குள்ள இரண்டு உறைவிடங்களில் தான் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அங்கிருந்து காலை 5:30க்கு வேறு இடங்களுக்கு மாற்றப்படுகின்றனர். அங்கு மக்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.
அங்குள்ளவர்கள் கண்ணாடிகளில் பனி உறைவதாகவும், உறைவிடத்தை விட்டு வெளியே வந்தால் கண் இமைகளில் பனி உறைவதாகவும் கூறியுள்ளனர்.
நள்ளிரவு 1 மணி , 2:20 மணி ஆகிய நேரங்களில் கூட தங்குமிடத்துக்கு மக்கள் விரைவதாக கூறப்படுகிறது.
விஸ்கான்சின் மற்றும் லோவாவில் 13500 மின் இணைப்புகள் இன்றி மக்கள் தவிக்கின்றனர்.இவ்வளவு குளிரில் மின் இணைப்புகளை வழங்குவதும் சிரமமாக உள்ளது என்று மாகாண அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பனி உறைந்து மக்கள் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளதாக பெடரல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)