This Article is From Dec 04, 2019

சத்தீஸ்கரில் எல்லை பாதுகாப்பு படையினருக்குள் திடீர் மோதல்: 6 வீரர்கள் உயிரிழப்பு!

இந்த மோதல் தொடர்பான காரணம் சரியாக தெரியவில்லை என்றும், தாக்குதல் நடத்திய வீரர் தனக்கு விடுமுறை கிடைக்காததால் விரக்தியில் இருந்ததாக தெரிகிறது. தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

சத்தீஸ்கரில் எல்லை பாதுகாப்பு படையினருக்குள் திடீர் மோதல்: 6 வீரர்கள் உயிரிழப்பு!

அந்த வீரர் சக வீரர்களை சுட்டதுடன் தன்னை தானே சுட்டு கொண்டுள்ளார்.

Raipur:

சத்தீஸ்கரில் எல்லை பாதுகாப்பு படையினருக்குள் ஏற்பட்ட மோதலில் 6 வீரர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சத்தீஸ்கரில் இந்திய - திபெத் எல்லைக் காவல்படையினருக்குள் (ITBP) ஏற்பட்ட திடீர் மோதலில் ஒரு வீரர் தனது துப்பாக்கியால் தாக்கியுள்ளார். இதில் சக வீரர்கள் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த மோதலில் அந்த வீரர் சக வீரர்களை சுட்டதுடன் தன்னை தானே சுட்டு கொண்டுள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஐஜி சுந்தராஜ் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது, சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 350 கி.மீ தொலைவில் உள்ள நாராயணப்பூர் மாவட்டத்தில் உள்ள இந்திய - திபெத் எல்லைக் காவல்படையினர் தங்கியிருந்த முகாமில் இன்று காலை 9 மணி அளவில் இந்த மோதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

முன்னதாக கிடைத்த தகவலின் படி, இந்திய - திபெத் எல்லைக் காவல்படை வீரர் ஒருவர் சக வீரர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 5 பேர் உயிரிழந்ததாகவும், 2 பேர் காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். 

எனினும் இந்த மோதல் தொடர்பான காரணம் சரியாக தெரியவில்லை என்றும், தாக்குதல் நடத்திய வீரர் தனக்கு விடுமுறை கிடைக்காததால் விரக்தியில் இருந்ததாக தெரிகிறது. தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். 

காயமடைந்த வீரர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். மேலும், மூத்த காவல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார். 
 

.