Read in English বাংলায় পড়ুন
This Article is From Nov 23, 2018

ஜம்மூ காஷ்மீரில் என்கவுன்ட்டர்: 6 தீவிரவாதிகள் கொலை!

பிஜ்பெஹராவின் செகிபோரா கிராமத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கக் கூடும் என்று பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் வந்துள்ளது

Advertisement
இந்தியா

3 நாட்களுக்கு முன்னர் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்

New Delhi:

ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தின் அனாந்த்நாக் மாவட்டத்தில் நடந்த என்கவுன்ட்டர் சம்பவத்தில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிஜ்பெஹராவின் செகிபோரா கிராமத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கக் கூடும் என்று பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் வந்துள்ளது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்கவுன்ட்டரில் ஈடுபட்டனர். 

‘தீவிரவாதிகள் பதுங்கியிருந்து இடத்தைக் கண்டடைந்து, பாதுகாப்புப் படையினர் அவர்களை சுற்றி வளைத்த போது, துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது' என்று போலீஸ் தரப்பினர் தகவல் தெரிவித்துள்ளனர். தீவிரவாதிகளை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. 

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனாந்த்நாக் பகுதியில் மொபைல் நெட்வொர்க் வசதியை அரசு நிர்வாகம் தடை செய்து வைத்துள்ளது. 

Advertisement

3 நாட்களுக்கு முன்னர் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் பலியானார். 3 பேருக்குக் காயம் ஏற்பட்டது.

Advertisement