This Article is From Mar 14, 2019

6 அணு மின் நிலையங்களை கட்ட இந்தியா - அமெரிக்கா ஒப்புதல்!

கடந்த ஆண்டு அக்டோபரில், இந்தியா- ரஷ்ய நாடுகள், 6 அணு உலைகளை கட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. 

6 அணு மின் நிலையங்களை கட்ட இந்தியா - அமெரிக்கா ஒப்புதல்!

2024 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்தியா, தனது அணு மின் நிலையம் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத் திறனை மும்மடங்கு உயர்த்த இலக்கு வைத்துள்ளது. 

ஹைலைட்ஸ்

  • இந்தியாவுக்கு, அதிக அளவிலான அணு உலைகளை விற்க அமெரிக்கா முயற்சி
  • பல ஆண்டுகளாக இந்தியாவும், அமெரிக்காவிடமிருந்து அதை வாங்கப் பார்க்கிறது
  • அது குறித்தான வதிமுறைகளே இருவரது முயற்சிக்கும் முட்டுக்கட்டையாக இருந்தது
WASHINGTON:

இந்தியாவில் 6 அணு மின் நிலையங்களை கட்ட இந்தியா - அமெரிக்கா இடையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இரு நாட்டு அரசு தரப்பும் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளது. 

இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே மற்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் ஆண்ட்ரியா தாம்ஸன் இடையில் கடந்த இரண்டு நாட்களாக நடந்து பேச்சுவார்த்தையை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘இரு நாட்டுகளிலும் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நோக்கில், இந்தியாவில் 6 அணு மின் நிலையங்கள் புதியதாக கட்டப்படும்' என்று கூறப்பட்டுள்ளது. 

அமெரிக்காவிடமிருந்து இந்திய அரசு, கடந்த பல ஆண்டுகளாகவே அணு உலைகளை வாங்க விவாதித்து வந்தது. ஆனால், இந்திய தரப்பில் இருந்த விதிமுறைகள் அதற்கு முட்டுக்கட்டையாக இருந்ததாக தெரிகிறது. குறிப்பாக, அணு உலை அமைத்த பின்னர் நடக்கும் விபத்துக்கு அதைத் தயாரித்தவர்களுக்கு பொறுப்பு கிடையாது என்றும், அதை உபயோகிப்பவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்றிருக்கும் சர்வதேச விதிமுறைக்கு ஏற்றாற் போல் இந்திய தரப்பு விதிமுறைகள் இல்லாதது, இந்த விவகாரத்தில் பின்னடைவாக இருந்தது எனப்படுகிறது. 

பிட்ஸ்பர்கை மையமாக வைத்து செயல்படும் வெஸ்டிங்ஹவுஸ், இந்தியாவில் அணு உலைகளை கட்டுவதற்கு பல ஆண்டுகள் முயன்று வந்தது. விதிமுறையில் இருக்கும் கறார் தன்மை காரணமாக அணு உலைகளை கட்ட இயலாமல் போனது. வெஸ்டிங்ஹவுஸ், 2017 ஆம் ஆண்டு திவால் ஆனதைத் தொடர்ந்து, இந்தத் திட்டம் கிடப்பில் போடப்படும் எனப்பட்டது. 

அணு மின் நிலையங்களை இந்தியாவில் கட்டுவது குறித்து முதன் முதலில் 2016-ல் தெரிவிக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டு போடப்பட்ட அமெரிக்க- இந்திய அணு ஒப்பந்தத்தை ஒட்டி 2016 அறிவிப்பு வெளியானது. 

2024 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்தியா, தனது அணு மின் நிலையம் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத் திறனை மும்மடங்கு உயர்த்த இலக்கு வைத்துள்ளது. 

கடந்த ஆண்டு அக்டோபரில், இந்தியா- ரஷ்ய நாடுகள், 6 அணு உலைகளை கட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. 
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.