This Article is From May 17, 2020

“அம்மா அரசு என்ற பெயரில் இயங்கும் அடிமை அரசு“: தமிழகத்திற்கான நிதி எங்கே என கமல் சீற்றம்!

மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் தற்போது மத்திய அரசின் திட்டங்கள் குறித்து ட்விட் செய்துள்ளார்.

Advertisement
தமிழ்நாடு Posted by

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25 அன்று அமல்படுத்தப்பட்ட முழு முடக்க(LOCK DOWN) நடவடிக்கை காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் பெருமளவு முடக்கியது. ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்த பொருளாதாரம் தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக மேலும் பாதிப்பை சந்தித்தது. வேலையிழப்புகள், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் முடக்கம் என பல்வேறு வகைகளில் பொருளாதாரம் பாதித்தது. இதனை மேம்படுத்துவதற்காகவும், இயல்பு நிலைக்கு திருப்புவதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி 20 கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்பு பொருளாதார திட்டத்தினை அறிவித்தார். அதன் சிறப்பம்சங்களை தொடர்ச்சியாக மத்திய  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்நிலையில் இந்த திட்டத்தின் பல அம்சங்கள் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாயின. எதிர்க்கட்சிகள் பலர் இந்த திட்டத்தின் அம்சங்களை விமர்சித்திருந்தனர்.

இந்நிலையில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் தற்போது மத்திய அரசின் திட்டங்கள் குறித்து ட்விட் செ்ய்துள்ளார். அதில்

“20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எவ்வளவு?
மாநிலத்திற்கு நியாயமாக வர வேண்டியதைக் கேட்டால் எங்கே  எஜமானர் மனசு கோணி விடுமே என்ற பயம்.ஆகவே டாஸ்மாக்கில்  மக்கள் உயிரைப் பணயம் வைத்து பணம் பறிக்கிறது  அம்மா அரசு என்ற பெயரில் இயங்கும் அடிமை அரசு.“ என தனது விமர்சனத்தை மத்திய அரசின் திடத்தின் மீதும் மாநில அரசின் மீதும் முன்வைத்துள்ளார். 

Advertisement
Advertisement