This Article is From Oct 24, 2018

கூட்டத்தை கண்டால் ரயிலின் வேகத்தை குறையுங்கள்: ஓட்டுனர்களுக்கு ரயில்வே உத்தரவு

அமிர்தசரஸ் விபத்து போன்று மீண்டும் ஒன்று ஏற்படாமல் தடுப்பதற்காக வடக்கு ரயில்வே நிர்வாகம் குறிப்பிட்ட சில உத்தரவுகளை ஓட்டுனர்களுக்கு பிறப்பித்துள்ளது

கூட்டத்தை கண்டால் ரயிலின் வேகத்தை குறையுங்கள்: ஓட்டுனர்களுக்கு ரயில்வே உத்தரவு

அமிர்தசரஸ் துயர சம்பவத்தை அடுத்து வடக்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.

New Delhi:

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸி கடந்த 19-ம் தசரா பண்டிகை கோலகலமாக நடைபெற்றது. அப்போது, ரயில்வே பாதையில் பொதுமக்கள் திரண்டிருந்தனர். அவர்கள் மீது வேகமாக வந்த ரயில் ஏறியதில் 61 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், அமிர்தசரஸ் போன்று மற்றொரு துயர சம்பவம் நடைபெறாமல் தடுப்பதற்காக வடக்கு ரயில்வே சில உத்தரவுகளை ரயில் ஓட்டுனர்களுக்கு பிறப்பித்துள்ளது. அதன்படி, கூட்டத்தை கண்டால் ரயில் வேகத்தை குறைத்து ஓட்ட வேண்டும். குறிப்பாக பண்டிகை காலங்களில் மிகுந்த கவனத்துடன் ரயிலை இயக்க வேண்டும்.

மக்கள் கூட்டத்தை தண்டவாளத்தின் அருகே பார்க்கும்போது அதுகுறித்த தகவல்களை அருகில் உள்ள ரயில் நிலையங்களுக்கு தெரிவித்து விட வேண்டும். பண்டிகை சமயங்களில் அடிக்கடி விசில் அடித்து ரயிலை இயக்க வேண்டும் என்பது போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று, ரயில்வே பாதைகளில் மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்க ரயில்வே போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வடக்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
 

.