பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் வகையிலான ‘ஸ்மார்ட் டஸ்பினை’ அரசு அறிமுகம் செய்துள்ளது.
ஹைலைட்ஸ்
- கடந்த 1-ம் தேதி பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்தது
- இந்தத் தடை உத்தரவு குறித்து சென்ற ஆண்டே அறிவிக்கப்பட்டது
- 500 'ஸ்மார்ட் டஸ்பின்கள்' அறிமுகம் செய்யப்பட உள்ளன
சமீபத்தில் ஒரு முறை பயன்படுத்தி எரியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது. இந்நிலையில் பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் வகையிலான ‘ஸ்மார்ட் டஸ்பினை' அரசு அறிமுகம் செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் சுமார் 500 இடங்களில் இந்த ஸ்மார்ட் டஸ்பின் அமைக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை மக்கள் போட்டால், அவர்களுக்கு ஒரு சிறப்பு கூப்பன் வழங்கப்படும். அந்த கூப்பன் மூலம் சிறப்பு சலுகைகளை பெற முடியும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் டஸ்பின் வைக்கும் முறையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று தொடங்கி வைத்தார். அவர், பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டிலையும், ஸ்மார்ட் டஸ்பின் இயந்திரத்துக்குள் செலுத்தி சோதித்துப் பார்த்தார்.
கடந்த ஜனவரி 1 ஆம் தேதி, பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை உத்தரவை அமல் செய்தது தமிழக அரசு. இதையடுத்து, துணிப் பை பயன்பாடுகளும், இயற்கை முறையில் உருவாகும் பொருட்களின் பயன்பாடுகளும் வெகுவாக அதிகரித்துள்ளன.