Read in English
This Article is From Jun 09, 2018

மொபைல் பைத்தியங்களுக்காக தனி நடைபாதை: இது சீன அலப்பறை!

மற்ற வழித்தடங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்ட சிவப்பு, நீலம், பச்சை என பல நிற வண்ணங்களில் இப்பாதை அமைக்கப்பட்டுள்ளது

Advertisement
விசித்திரம்

Highlights

  • பாதசாரிகள், சைக்கிள் செல்ல தனி பாதை வழக்கத்தில் உள்ளது
  • ஸ்மார்ட்போன் அடிமைகளுக்காக தனி பாதை அமைக்கப்பட்டுள்ளது
  • 100 மீட்டர் நீளமுள்ள பாதை உருவாக்கிய சீனா ஷாப்பிங் மால்
பொதுவாக சாலைகளில் பாதசாரிகளுக்கு என்றும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கும் என்றும் முக்கிய சாலையிலிருந்து பிரித்து ஒரு வழி உருவாக்கப்பட்டு இருக்கும். ஆனால், வடக்கு சீனாவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்திக் கொண்டே நடந்து செல்பவர்களுக்கு என தனி நடைபாதை அமைத்துள்ளனர்.

செல்போன் பைத்தியங்களுக்காகவே வணிக நகரான ஜியான் நகரில் உள்ள ஒரு ஷாப்பிங் மால் அருகே இந்தப் புதிய வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. 100 மீட்டர் நீளமும் 1 மீட்டர் அகலமும் உள்ள இந்த சிறப்பு வழித்தடத்தில் “ஸ்மார்ட் போன் அடிமைகளுக்கு மட்டும்” என சிறப்புக் குறிப்பு இடம்பெற்றுள்ளது.

மற்ற வழித்தடங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்ட சிவப்பு, நீலம், பச்சை என பல நிற வண்ணங்களில் இப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் இருந்து பாதசாரிகளைப் பாதுகாக்கவும், பாதசாரிகளிடம் இருந்து ஸ்மார்ட்போன் பிரியர்களைப் பிரித்து பாதுகாக்கவும் இந்தப் புதிய நடைபாதை பயன்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
ஆனால், இப்பாதைதான் பாதசாரிகள் நடக்கும் போது அவர்கள் தங்களது ஸ்மார்ட் போன்களை பைக்குள் வைத்துவிட தூண்டுவதாகவும் அறிவுறுத்துவதாகவும் அமையும் என இந்தப் புதிய நடைபாதையை அமைத்த நிர்வாகிகள் கூறுகின்றனர்.

இந்த நடைபாதை அமைப்பு பல தரப்புகளில் இருந்தும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. பலர் இந்த புதிய ஐடியாவுக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement