This Article is From Nov 05, 2018

டெல்லியில் அதிகரித்த பனிப்புகை; காற்றின் தரம் மோசம்!

தலைநகர் டெல்லியில் இன்று காலை முதல் கடும் பனிப் புகை நிலவி வருகிறது. மேலும் காற்றின் தரமும் ‘மிக மோசமான’ நிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

டெல்லியில் அதிகரித்த பனிப்புகை; காற்றின் தரம் மோசம்!

தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால், காற்று மாசு அதிகரித்துள்ளது டெல்லி மக்களை கவலடையச் செய்துள்ளது. 

New Delhi:

தலைநகர் டெல்லியில் இன்று காலை முதல் கடும் பனிப் புகை நிலவி வருகிறது. மேலும் காற்றின் தரமும் ‘மிக மோசமான' நிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிஎம்2.5 என்ற மாசுவின் அளவு, வழக்கத்தைவிட 10 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், அதனால் காற்றின் தரம் மிக மோசமான நிலையை அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பிஎம்2.5 என்ற மாசு தான், நுரையீரலுக்குள் புகுந்து பல ஆரோக்கிய சீர்கேடுகளை விளைவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

நேற்று டெல்லி அரசு நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கைகளை தொடர்ந்து, காற்றின் வேகம் அதிகமாக இருந்ததன் காரணமாகவும், மாசு அளவு குறைவாக இருந்தது. ஆனால், இன்று திடீரென்று காற்று மாசு அதிகரித்துள்ளது. தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால், காற்று மாசு அதிகரித்துள்ளது டெல்லி மக்களை கவலையடையச் செய்துள்ளது. 

இந்த விவகாரம் குறித்து இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு மையம், ‘டெல்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் சென்ற வாரத்தை ஒப்பிடும் போது, கடந்த சனிக்கிழமை விவசாயிகள் சுள்ளிகள் மற்றும் மிச்சமான பொருட்களை எரிப்பது குறைவாக இருந்தது. இதனால், நேற்று டெல்லியின் காற்று மாசுவின் அளவு குறைவாக இருந்தது. அதே நேரத்தில் இன்று காற்று மாசு மிக மோசமான நிலையை எட்டியுள்ளது' என்று கவலை தெரிவித்துள்ளது. 

காற்று மாசு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து டெல்லி அரசு நிர்வாகம், ‘போக்குவரத்துக் காவலர்கள் மிக அதிகமாக மாசு ஏற்படுத்தும் வாகனங்களை கண்டுபிடிக்க வேண்டும். நவம்பர் 10 ஆம் தேதி வரை போக்குவரத்து நெரிசல் வராதபடி பார்த்துக் கொள்ள வேண்டுமென்றும், மேலும் மாசு ஏற்படுத்தும் கட்டுமானப் பணிகளுக்குத் தற்காலிகமாக தடை விதிக்கப்படுகிறது' என்றும் கூறியுள்ளது.

.