हिंदी में पढ़ें Read in English
This Article is From Feb 01, 2019

பள்ளி சத்துணவில் பாம்பு! மாணவர்கள் அச்சம்!

உணவு வழங்குவதை பாதியில் நிறுத்தியதால் குழந்தைகள் பசியுடனே வீட்டுக்கு திரும்பிய சோகம்!

Advertisement
நகரங்கள்

கிச்சடி பாத்திரத்தில் பாம்பை கண்டு பதரிய ஆசிரியர்கள்!

Nanded, Maharashtra:

மகராஷ்டிராவில் உள்ள அரசு ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கிச்சிடியில் பாம்பு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 80 குழந்தைகள் வரை படிக்கும் இந்த கார்காவான் ஜில்லா பிரிஷ்யத் ஆரம்ப பள்ளியில் கடந்த புதன்கிழமையன்று நடந்த இச்சம்பவத்தில் மதியம் அளிக்கப்படும் மதிய உணவு பாத்திரத்தில் பாம்பு இருந்ததை கண்டு அச்சம் அடைந்தனர்.

அதைதொடர்ந்து உணவு அளிப்பதை நிறுத்தியதால் குழந்தைகள் பசியுடனே வீட்டுக்கு திரும்பினர்.

நான்டேட் மாவட்ட கல்வி அதிகாரி பிரஷாந்து திக்ராஸ்கார் இச்சம்பவத்தை குறித்து பேசுகையில் ‘ இந்த சம்பவத்திற்கு முக்கியதுவம் கொடுத்து விசாரணை செய்யப்படுகிறது, அதைதொடர்ந்து அடுத்தக்கட்ட நடவெடிக்கை எடுக்கப்படும்' என கூறினார்.

Advertisement

மேலும் அவர் பள்ளிக்கு கிச்சடி வழங்குவதற்கான பொருப்பை சிறுதொழில் செய்பவர்களுக்கும், அரசு சாரா அமைப்புக்களுக்கும் பள்ளி நிர்வாகம் தந்துள்ளதாக கூறினார்.

இந்த உணவு திட்டம் 1996 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், சுமார் 1.25 பள்ளி மாணவர்கள் இத்திட்டத்தால் பயனடைந்து வருகின்றனர்.
 

Advertisement
Advertisement