Read in English
This Article is From Jun 17, 2018

விமான நிலைய அதிகாரிகளின் கூட்டத்தின் நடுவில் புகுந்த விஷ பாம்பு

பிடிப்பட்ட பாம்பு வைபர் வகையை சேர்ந்தது எனவும், மிக அதிக அளவில் விஷம் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டது

Advertisement
இந்தியா (with inputs from ANI)
Puducherry:

புதுச்சேரி: புதுச்சேரி விமான நிலையத்தில் உள்ள முக்கியமான சிறப்பு  அறையில் அதிக விஷமுள்ள பாம்பு பிடிப்பட்டது.

 

பின்னர், பிடிப்பட்ட பாம்பு வைபர் வகையை சேர்ந்தது எனவும், மிக அதிக அளவில் விஷம் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டது.

 

அறையின் சோஃபா பகுதியில் இருந்த ஆறு அடி உயரமுள்ள பாம்பை முதலில் கண்ட இந்திய விமான நிலைய அதிகாரிகளின் தலைவர், மற்ற அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பியுள்ளார்.

 

அறையை காலி செய்த பின்னர், விமான நிலையத்தில் பணியாற்றி வந்த ஆதரவு ஊழியர்களில் ஒரு பெண், தரை துடைக்கும் மாப் வைத்து பாம்பை துறத்த முயன்றதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்

 

பின்னர், காவல் துறையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் சம்பவம் நடக்கும் இடத்திற்கு வந்து அறையில் இருந்த பாம்பை வெளியேற்றினார்.

 

பிடிப்பட்ட பாம்பை வனத்துறையிடம் ஒப்படைத்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். புதுச்சேரி விமான நிலையத்தின் அருகில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் இருந்து வந்திருக்க வாய்ப்பு என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

அறையில் இருந்த பாம்பை பிடித்து ஒப்படைத்த  இந்திய ரிசர்வ் படைப்பிரிவை சேர்ந்த காவலர் தியாகுவிற்கு பரிசுத்தொகையும், சான்றிதழும் காவல் துறை தலைமை இயக்குனர் எஸ்கே கவுதம் வழங்கினார்.

 

பாம்பை வெளியேற்ற முயற்சிகள் மேற்கொண்ட ஆதரவு ஊழியரும் கவுரவிக்கப்படுவார் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தன்ர்.

 

காட்டுப்பகுதி அருகாமையில் உள்ள கட்டங்களில், இருட்டு பகுதிகளில் பாம்புகள் இருப்பது சாதரணமாகிவிட்டது என வன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.




 

 

Advertisement