உள்ளூர் நபர்களின் உதவியுடன் வேட்டையாடி வந்த சிறுத்தையை மடக்கிப் பிடித்துள்ளனர் என்று வனத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Lahaul-Spiti: இமாச்சல பிரதேச மாநிலத்தின் ஸ்பிடி மாவட்டத்தில், கடந்த 4 நாட்களில் மட்டும் 40 ஆடுகளை வேட்டையாடிய பனிச் சிறுத்தை பிடிபட்டது. வனத் துறையினர், உள்ளூர் நபர்களின் உதவியுடன் வேட்டையாடி வந்த சிறுத்தையை மடக்கிப் பிடித்துள்ளனர் என்று வனத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஸ்பிடியில் உள்ள ஜியு கிராமத்தில் பனிச் சிறுத்தை பிடிக்கப்பட்டதாக காசா பிரிவு வனத் துறை அதிகாரி ஹார்தேவ் நேகி தகவல் தெரிவித்துள்ளார்.
பிடிக்கப்பட்ட சிறுத்தை, சிம்லாவில் உள்ள இமாலய இயற்கைப் பூங்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரி நேகி கூறியுள்ளார்.