This Article is From Jul 08, 2019

சமூக ஆர்வலர் முகிலன் கண்டுபிடிக்கப்பட்டார்

திடீரென காணாமல் போனார். 150 நாட்கள் நெருங்கி வரும் நிலையில் அவரை கண்டுபிடித்து ஒப்படைக்க கோரும் மனுமீது உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு விசாரணை நடந்து வந்தது.

சமூக ஆர்வலர் முகிலன் கண்டுபிடிக்கப்பட்டார்

சமூக செயற்பாட்டாளரான போராளி முகிலன் காணாமல் போன வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆந்திரா காவல்துறையினர் பிடியில் முகிலன் சிக்கியிருப்பதாக வெளியான காணொலியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கூடங்குளத்தை அணு உலை  உட்பட மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராக குரல் கொடுத்து சிறைவாசம் அனுபவித்தவர் முகிலன். ஜல்லிக்கட்டுப் புரட்சியின் போது போலீசாரின் கொடூர அடக்குமுறைக்குள்ளானவர். 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்திலும் தீவிரமாக பங்கேற்றவர். தூத்துக்குடியில் 13 தமிழர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து நடந்த போராட்டங்களில் பங்கேற்றவர்.

அத்துடன் தூத்துக்குடியில் 13 பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்டது திட்டமிட்ட ஒரு சம்பவம் என்பதை ஆதாரத்துடன் சென்னையில் செய்தியாளர்களிடம் வெளிப்படுத்தினார் முகிலன். அந்த செய்தியாளர் சந்திப்புக்குப் பின்னர் முகிலன் திடீரென காணாமல் போனார். 150 நாட்கள் நெருங்கி வரும் நிலையில் அவரை கண்டுபிடித்து ஒப்படைக்க கோரும் மனுமீது உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு விசாரணை நடந்து வந்தது.

அவரது நிலைமை என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை. முகிலன் உயிருடன் இருக்கிறாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து பல கேள்விகள் எழுந்தன. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது.

வழக்கு விசாரணையின் போது முகிலன் உயிருடன் இருப்பதாக காவல்துறை தெரிவித்து இருந்தனர். திருப்பதி ரயில் நிலையத்தில் முகிலன் கோஷமிட்டபடி காவல்துறையினர் இழுத்து செல்லும் காணொலி வெளியாகியுள்ளது.

.