This Article is From Mar 03, 2019

‘’சமூக வலைதள போராளிகள் எல்லைக்கு சென்று போராடலாம்’’-உயிரிழந்த பைலட்டின் மனைவி காட்டம்!!

ஜம்மு காஷ்மீரில் எம்.ஐ. -17 ரக ஹெலிகாப்டர் ஒன்று கடந்த வாரம் விபத்துக்குள்ளானது. இதில் விமானப்படையை சேர்ந்த வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர். அவர்களில் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கை சேர்ந்த நினாத் மண்டாகனேவும் ஒருவர்.

‘’சமூக வலைதள போராளிகள் எல்லைக்கு சென்று போராடலாம்’’-உயிரிழந்த பைலட்டின் மனைவி காட்டம்!!

பைலட் நினாத்துக்கு 2 வயதில் நியா குழந்தை உள்ளது.

ஹைலைட்ஸ்

  • ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 7 பேரில் நினோத்தும் ஒருவர்
  • உயிரிழந்த நினோத் மண்டாகனேவுக்கு 2 வயது மகள் உள்ளார்
  • போரை விரும்புவர்கள் எல்லைக்கு செல்லலாம் என்று கூறியுள்ளார் விஜிதா.
Nashik:

சமூக வலைதள போராளிகள் எல்லைக்கு சென்று போராடலாம் அல்லது நாட்டிற்கு நல்லது செய்யும் விதமாக குப்பைகளை அகற்றலாம், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளலாம் என்று, விபத்தில் உயிரிழந்த பைலட் நினாத் மண்டாகனேவின் மனைவி விஜிதா கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் எம்.ஐ. -17 ரக ஹெலிகாப்டர் ஒன்று கடந்த வாரம் விபத்துக்குள்ளானது. இதில் விமானப்படையை சேர்ந்த வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர். அவர்களில் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கை சேர்ந்த நினாத் மண்டாகனேவும் ஒருவர்.

நினாத்தின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் கடந்த வெள்ளிக் கிழமை நடைபெற்றது. கடந்த சில நாட்களில் புல்வாமா தாக்குதல், ஹெலிகாப்டர் விபத்து, விமானப்படையின் பதிலடி என பல்வேறு சம்பவங்கள் எல்லையில் நடந்துள்ளன. இதுகுறித்து சமூக வலைதளங்களில் ஏராளமானோர் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமூக வலைதள போராளிகளுக்கு விஜிதா மண்டாகனே வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

சமூக வலைதளங்களில் சிலர் பொறுப்புடனும், சிலர் பொறுப்பில்லாமலும் நடந்து கொள்கின்றனர். சமூக வலைதளங்களில் சிலர் பொங்கி எழுகின்றனர். உண்மையிலேயே அவர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றால், அவர்கள் ராணுவத்தில் சேரலாம். அல்லது அவர்களது குடும்பத்தினரை ராணுவத்தில் சேர்த்து விடலாம்.

அது முடியவில்லை என்றால் குறைந்தபட்சம் நாட்டிற்காக சின்னச் சின்ன உதவிகளை செய்யலாம். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்தல், பொது இடங்களில் சிறுநீர் கழிக்காமல் இருத்தல், சிறுமிகளை துன்புறுத்தாமல் இருத்தல் போன்ற சிறிய உதவிகளை அவர்கள் செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். அவரது இந்தப் பேட்டி வைரலாகி வருகிறது.

i92604no

 

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பைலட் நினாத்துக்கு 2 வயதில் நியா குழந்தை உள்ளது. நினாத்தின் சவப்பெட்டியை குழந்தை நியா முத்தமிட்ட காட்சி நெஞ்சை உருக்குவதாக அமைந்தது.

ஐ.ஏ.என்.எஸ். என்ற செய்தி நிறுவனத்திற்கு விஜிதா அளித்துள்ள பேட்டியில், ‘'நாங்கள் போரை விரும்பவில்லை. அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி உங்களுக்கு தெரியாது. இன்னும் பல நினாத்தை நாங்கள் இழக்க விரும்பவில்லை. எனவே, சமூக வலைதளங்களில் பொங்கி எழுவதை நிறுத்துங்கள். நீங்கள் போரை விரும்பினால் எல்லைக்கு செல்லுங்கள்'' என்று கூறியுள்ளார்.

 

.