ட்விட்டரில் மோடியை விட ட்ரம்புக்கு அதிக ஃபாலோயர்கள் உள்ளனர்.
New Delhi: ஃபேஸ்புக்கில் அதிகம் விரும்பப்பட்ட தலைவர்கள் பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை பின்னுக்கு தள்ளி விட்டு பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் இருக்கிறார். தனக்கும் 2-வது இடத்தில் இருப்பவருக்கும் இடையே மிகப்பெரும் இடைவெளியை ஏற்படுத்தி சமூக வலைதள ராஜாவாக திகழ்கிறார் பிரதமர் மோடி.
மோடிக்கு ஃபேஸ்புக்கில் 4.35 கோடி ஃபாலோயர்கள் உள்ளனர். அதாவது அத்தனைபேர் அவரது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இருக்கிறார். அவரது பக்கத்தை 2.38 கோடி பேர் லைக் செய்துள்ளளனர்.
மோடியின் பக்கம் மட்டுமல்லாமல், பிரதமர் அலுவலகத்தை கையாளும் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்திற்கும் அதிக லைக்குகள் குவிந்துள்ளன. 1.37 கோடி பேர் அந்தப் பக்கத்தை லைக் செய்துள்ளனர்.
ஃபேஸ்புக்கில் அதிகம் விரும்பப்பட்ட தலைவர்கள் பட்டியலில் மோடி, ட்ரம்புக்கு அடுத்தபடியாக ஜோர்டான் ராணி ரானியாவின் பக்கம் உள்ளது. அவரது பக்கத்தை 1.69 கோடிபேர் லைக் செய்துள்ளனர். 89.9 லட்சம் லைக்குகளுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 8-வது இடத்தில் இருக்கிறார்.
ஃபேஸ்புக்கில் மோடி வென்றாலும், ட்விட்டரில் ட்ரம்ப் அவரை பின்னுக்கு தள்ளியுள்ளார். ட்ரம்பின் ட்விட்டர் பக்கத்தை 5.97 கோடி பேரும், மோடியின் பக்கத்தை 4.68 கோடி பேரும் லைக் செய்துள்ளனர். ராகுல் காந்திக்கு 92 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர்.