பெங்களூருவில் உள்ள அதன் பிரதான அலுவலகம் குர்கான் மற்றும் மும்பைப் பகுதியிலுள்ள தனது அலுவலகங்களை எஸ்ஏபி நிறுவனம் தற்காலிகமாக மூடியுள்ளது.
New Delhi, India: ஜெர்மானிய மென்பொருள் நிறுவனமான எஸ்ஏபி இந்தியாவிலுள்ள தனது அலுவலகங்களை சுகாதார விரிவாக்கத்திற்காக மூடிவருவதாக குறிப்பிட்டுள்ளது. பெங்களூரிலுள்ள அதன் தலைமை செயலகத்தில் இரண்டு ஊழியர்களுக்கு எச்1என்1 பன்றிக் காய்ச்சலுக்கான சாதகமான பரிசோதனை முடிவு வெளிவந்துள்ளதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை எஸ்ஏபி நிறுவனம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெங்களூருவில் உள்ள அதன் பிரதான அலுவலகம் குர்கான் மற்றும் மும்பைப் பகுதியிலுள்ள தனது அலுவலகங்களை இந்நிறுவனம் தற்காலிகமாக மூடியுள்ளது. மேலும், சர்வதேச அளவில் கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கடியைத் தொடர்ந்து மறு அறிவிப்பு வரும்வரை ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே தங்கள் பணிகளை மேற்கொள்ளுமாறு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
நோய்த்தொற்று பரவாமல் தடுக்க அலுவலகத்தினை தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்ள இருப்பதாகவும், மேலும், காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவமனையை அனுகுமாறும் நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட ஊழியரின் முந்தைய பயணங்கள் குறித்து நிறுவனம் எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை.
எச்1என்1 தொற்று அபாயம் குறித்து உலக சுகாதார நிறுவனம் சில அறிகுறிகளை வழங்கியிருக்கிறது. அதில், சளி மற்றும் தொண்டைப் புண் போன்றவை குறிப்பிடத்தக்கதாகும். 2009-ல் இதற்கான முதல் அறிகுறி அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், 2014-15 காலக்கட்டங்களில் இந்தியாவில் இந்தத் தொற்று காரணமாக நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், சீனாவில் இம்மாதிரியான தொற்றுக்கு 2100-க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இம்மாதிரியான தொற்றுக்கு சிகிச்சையளிப்பதில் பெரிய அளவிற்கு முன்னேற்றம் இல்லை என சுகாதார வட்டங்கள் குறிப்பிட்டிருக்கிறது.