Solar Eclipse 2019: பிரதமர் மோடி இது தொடர்பான தனது புகைப்படங்களையும் ட்வீட்டரில் சேர் செய்துள்ளார்.
New Delhi: துரதிர்ஷ்டவசமாக, சூரிய கிரகணத்தை என்னால் பார்க்க முடியவில்லை என பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.
நெருப்பு வளைய சூரிய கிரகணம் இன்று காலை 7.59 அளவில் தெரிய தொடங்கியது. ஆரம்பத்தில் ஒரு பகுதி சூரிய கிரகணமாகத் தெரிந்தது, முதலில் சவுதி அரேபியாவின் ராயத்தில் தெரிய தொடங்கியது. இந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இந்த பகுதி கிரகணத்தை காண முடிந்தது.
கிரகணம் என்பது நிழல். சூரிய னுக்கும் பூமிக்கும் நடுவே ஒரே நேர்கோட்டில் நிலவு வருவதால் பூமியில் விழும் சூரிய ஒளி தடுக்கப் பட்டு நிலவின் நிழல் பூமியின் மேல் விழுவது சூரிய கிரகணம் எனப்படுகிறது. இதில் மூன்று வகை உண்டு. சந்திரனின் நிழல் முழுதாக சூரியனை மறைத்தால் அது முழு சூரிய கிரகணம்.
பிரதமர் மோடி இது தொடர்பான தனது புகைப்படங்களையும் ட்வீட்டரில் சேர் செய்துள்ளார்.
இந்நலையில், நெருப்பு வளைய சூரிய கிரகணம் இந்தியாவின் பல்வேறு இடங்களில் முழுமையாக தெரிந்தது. இருப்பினும் வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால் பல இடங்களில் கிரகணத்தை பார்க்க முடியவில்லை.
இதற்கிடையே சூரியகிரகணம் குறித்து பிரதமர் மோடி ட்வீட் செய்தார்.
அதில், ''நாட்டு மக்கள் எல்லோரையும் போல நானும் சூரியக் கிரகணத்தைக் காண ஆர்வமாகவே இருந்தேன். ஆனால் டெல்லியில் மேகமூட்டம் இருந்ததால் சூரிய கிரகணத்தை பார்க்க முடியவில்லை'' என்று தெரிவித்திருந்தார்.