சூரிய கிரகணம் 2020: கிரகணம் அடைந்த சூரியனை வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது
ஹைலைட்ஸ்
- புற ஊதா கதிர்களை வடிகட்டாத சன்கிளாஸ்கள் எந்த பாதுகாப்பையும் வழங்காது
- 2020-ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று ஏற்பட்டுள்ளது.
- உணவு கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை, வழக்கமான நாளை போலவே இதுவும் ஒரு நாள்.
New Delhi: 2020-ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று ஏற்பட்டுள்ளது. நாட்டின் வட மாநிலங்களில் உள்ள மக்கள் குறிப்பாக ராஜஸ்தான், ஹரியானா மற்றும் உத்தரகண்ட் பகுதிகளில் உள்ள மக்கள் வானத்தில் வியத்தகு "நெருப்பு வளையத்தை" கண்டனர். டெல்லியில் வானம் மேகம் மூட்டத்துடன் இருக்கிறது. இந்தியாவின் தென் மாநிலமான தமிழகத்திலும் சூரிய கிரகணத்தை காண முடிகிறது.
இந்நிலையில் காலை 10 மணி முதல் மத்தியம் 2 மணி வரையிலான நேரத்தில் நீங்கள் உணவு உண்கிறீர்களா? என சோமாடோ உணவு விநியோக நிறுவனம் ட்விட்டர் வாயிலாக கேள்வியை எழுப்பியுள்ளது.
சூரிய கிரகணத்தை கணக்கில் கொண்டு மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் பல கோயில்கள் மூடப்பட்டுள்ளன.
இந்த ஆண்டின் மீக நீண்ட பகல் பொழுதான இன்று, முதல் சூரிய கிரகணம் தோன்றியுள்ளது. நேற்றைய தினம் அமாவாசை என்பது குறிப்பிடத்தக்கது. காங்கோ, சூடான், எத்தியோப்பியா, ஏமன், சவுதி அரேபியா, ஓமான், பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்தும் கிரகணம் தெரியும்.
சூரிய கிரகணம் எப்போதுமே சந்திர கிரகணத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்போ அல்லது அதற்கு பின்னரோ நிகழ்கிறது.
கிரகணம் ஏற்படும் நேரங்களில் எவ்விதமான உணவு கட்டுப்பாடுகள் தேவை என்பது குறித்து அறிவியல் விஞ்ஞானிகள் மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். உணவு கட்டுப்பாடுகள் எதுவும் இல்லையென்றும், வழக்கமான நாளை போலவே இதுவும் ஒரு சாதாரண நாள்தான் என விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். மேலும், இது போன்ற சூரிய கிரணங்களை வெறும் கண்களால் பார்ப்பது கண்களுக்கு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
ஒரு அமாவாசை நாளில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும்போது சூரிய கிரகணம் நிகழ்கிறது, மேலும் சந்திரன் பூமியின் மீது நிழலைக் வீசும்.
இந்த பருவத்தில் இது இரண்டாவது கிரகணம்
புற ஊதா கதிர்களை வடிகட்டாத சன்கிளாஸ்கள் எந்த பாதுகாப்பையும் வழங்காது. சூரியன் மிகவும் பிரகாசமாக இருக்கும் ஒரு நட்சத்திரமாகும், இதன் ஒரு சிறிய பகுதியை மட்டுமே காணும்போது கூட, அது கண்களுக்கு ஆபத்தினை ஏற்படுத்தும்.