உத்தரகாண்டை சேர்ந்த ராஜேந்திர சிங் 2016-ல் பணியில் சேர்ந்தார்
Srinagar: ஜம்மு காஷ்மீரில் போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
அனந்த நாக் மாவட்டத்தில் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் நேற்று ஈடுபட்டிருந்தனர். ராணுவ வாகனத்தில் ரோந்து பணிகளும் நடத்தப்பட்டது. இந்த நிலையில் அங்கு திடீர் போராட்டம் வெடித்தது.
அப்போது, போராட்டக்காரர்கள் ராணுவ வாகனங்களை நோக்கி கற்களை வீசி தாக்கத் தொடங்கினர். இந்த சம்பவத்தில் ராணுவ வீரர் ராஜேந்திர சிங்குக்கு படுகாயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த ராஜேந்திர சிங் கடந்த 2016-ல் ராணுவத்தில் பணிக்கு சேர்ந்தார். இதேபோன்று வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவங்களில் 3 ராணுவத்தினர் கடந்த 2 நாட்களில் உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் பிரஜேஸ் குமார் என்ற வீரர் இமாச்சல பிரதேசத்தையும், கம்சியாமலினா என்பவர் மிசோரம் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.