This Article is From Dec 15, 2018

ஜம்மூ - காஷ்மீரில் என்கவுன்ட்டர்: 10 பேர் பலி!

Encounter in Pulwama: ஜம்மூ - காஷ்மீர் மாநிலத்தின், புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் இன்று காலை என்கவுன்ட்டர் நடந்துள்ளது

ஜம்மூ - காஷ்மீரில் என்கவுன்ட்டர்: 10 பேர் பலி!

Pulwama encounter: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புல்வாமா மாவட்டத்தில் இணையதள சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது

Srinagar:

Encounter in Pulwama: ஜம்மூ - காஷ்மீர் மாநிலத்தின், புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் இன்று காலை என்கவுன்ட்டர் நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில், பொது மக்களைச் சேர்ந்த 6 பேரும், ஒரு பாதுகாப்புப் படை வீரரும் பலியாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் தரப்பில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டில் இறந்த பொது மக்களில் இருவர் அபித் ஹுசேன், அமிர் அகமது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், இறந்தவர்கள் நெஞ்சில் மற்றும் தலையில் தோட்டா காயங்கள் இருந்ததாக கூறுகின்றனர். இந்த திடுக்கிடும் என்கவுன்ட்டரால், சம்பவ இடத்துக்கு அருகிலிருந்த பொது மக்கள் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பு, ‘புல்வாமா மாவட்டத்தில் 3 தீவிரவாதிகள், பொது மக்கள் வசிக்கும் பகுதியில் பதுங்கியுள்ளதாக எங்களுக்குத் தகவல் வந்தது. இதையடுத்து, ராணுவம், சிஆர்பிஎப், மற்றும் மாநில போலீஸ் ஆகியோர், புல்வாமாவில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்துதான் என்கவுன்ட்டர் (Pulwama Encounter) சம்பவம் நடந்தது' என்று தெரிவித்துள்ளது.

தற்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புல்வாமா மாவட்டத்தில் இணையதள சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

.