"சென்னையைப் பொறுத்தவரை வானம், மேகமூட்டத்துடன் காணப்படும்"
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் அளித்துள்ள தகவல்படி, “தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதே நேரத்தில் வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், தஞ்சை, நாகை, திருவாரூர், காரைக்கால் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இன்று ஆங்காங்கே கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தின் சங்கராபுரம், கும்பகோணம் மற்றும் மயிலாடுதறை ஆகிய இடங்களில் 8 சென்டீ மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம், மேகமூட்டத்துடன் காணப்படும். நகரத்தின் சில இடங்களில் மட்டும் மழை பெய்யலாம். சென்னையில் அதிகபட்சமாக 36 டிகிரியும் குறைந்தபட்சம் 26 டிகிரி வெயிலும் பதிவாகும்” என்று தகவல் தெரிவித்துள்ளது.