Read in English
This Article is From Aug 13, 2018

முன்னாள் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மறைவு!

முன்னாள் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி இன்று கொல்கத்தாவில் மரணமடைந்தார்

Advertisement
இந்தியா Posted by

முன்னாள் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி இன்று கொல்கத்தாவில் மரணமடைந்தார். 

சிறுநீரக பாதிப்புத் தொடர்பாக கொல்கத்தாவில் இருக்கும் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக அவர் சிகிச்சைப் பெற்று வந்தார். அவருக்கு 89 வயதாகியது. பெல்லே வியூ மருத்துமவனையில் அவர் கடந்த 8 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார். நெஞ்சுவலி வந்த பிறகு அவருக்கு வென்டிலேட்டர் மூலம் சுவாசம் கொடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அவரின் உடல்நிலை நேற்றுக் காலை மோசமானதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை 8:15 மணிக்கு சேட்டர்ஜி உயிரிழந்தார் என்று பெல்லே வியூ மருத்துவமனையின் தலைவர் பிரதிப் தோண்டன் தெரிவித்துள்ளார். 

10 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சேட்டர்ஜி, கடந்த 2 மாதங்களாக மருத்துவமனையில் அடிக்கடி அனுமதிக்கப்பட்டு வந்தார். அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. 

Advertisement

கடந்த 1968 ஆம் ஆண்டு அவர் சிபிஎம் கட்சியில் இணைந்தார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைமையில் கடந்த 2004 ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சி அமைந்த போது, அவர் லோக்சபா சபாநாயகராக ஆனார். 

கடந்த 2008 ஆம் ஆண்டு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அங்கமாக இருந்த இடதுசாரிகள், கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தது. இந்தியா - அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இடதுசாரிகள் கூட்டணியை முறித்தனர். இந்த முறிவின் போது, சேட்டர்ஜிதான் மக்களவை சபாநாயகராக இருந்தார். சிபிஎம், அவரை அரசுக்கு எதிராக வாக்களிக்குமாறு கேட்டது. ஆனால், அவர் அப்படி செய்ய மறுத்துவிட்டார். இதையடுத்து, அவர் சிபிஎம் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். 
 

Advertisement
Advertisement